இரவோடு இரவாக பாரீஸ் பறந்த ராஜேஷ் குமார்.. யாருக்கும் தெரியாமல்! மாணிக்கம் தாகூருக்கும் சொல்லலயாமே?

  • சென்னை: தமிழக அரசின் சுற்றுலாத்துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராஜேஷ் குமார் வெளிநாடு சென்றுள்ள விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காகி இருக்கிறது. அவரது இந்த திடீர் பயணம் தொடர்பாகவே தற்போது சில கேள்விகளும் எழுந்துள்ளன. குறிப்பாக, இந்தப் பயணம் குறித்து கட்சி தலைமையிடம் என்ன தகவல் தெரிவிக்கப்பட்டது என்பதுதான் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுதொடர்பான கூடுதல் தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன..!!

    Advertisement

    சமீபத்தில், கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி முன்னிறுத்தப்படுவாரா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    Advertisement

    ஆனால், அதற்கு மாணிக்கம் தாகூர் நேரடியாக ஆமாம், இல்லை என்று பதில் சொல்லாமல், தேசிய அளவில் இருப்பது இந்தியா கூட்டணி என்றும், தமிழகத்துக்கான மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணி என்றும் பொதுவான பதிலை மட்டுமே தெரிவித்திருந்தார்..

    மாணிக்கம் தாகூர்

    அதாவது ராகுல் காந்தியை விஜய் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது குறித்து அவர் தெளிவாக கூறவில்லை. இந்த அணுகுமுறை காங்கிரஸ் கட்சிக்குள் சில விவாதங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில், ராஜேஷ் குமார் - மாணிக்கம் தாகூர் இடையே ஏற்கனவே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

    Advertisement

    இந்த சூழலில்தான் ராஜேஷ் குமார் தொடர்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது... தமிழக அரசின் சுற்றுலாத்துறை அமைச்சரான காங்கிரஸ் ராஜேஷ் குமார், நேற்று முன் தினம் இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு பிரான்ஸ் தலைநகரம் பாரீஸ்சுக்கு சென்றிருக்கிறார். அவருடன் சுற்றுலா துறை அதிகாரிகள் யாரும் சென்றதாகத் தெரியவில்லை.

    அதேபோல, இது அரசு முறை பயணமா? அல்லது தனிப்பட்ட முறை பயணமா? என்பது கூட காங்கிரஸ் தலைவர்களுக்குத் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூருக்கு கூட தகவல் சொல்லாமல் ஃப்ளைட் ஏறியிருக்கிறார் என்கிறார்கள். இந்த நிலையில், மாநில உளவுத்துறைக்கு இது தெரிந்து, எதற்காக பாரீஸ் சென்றுள்ளார்? அரசிடம் அனுமதிப் பெற்றாரா? என்று விசாரிக்கத் தொடங்கியுள்ளதாம்.

    Advertisement

    உளவுத்துறை விசாரணை

    கடந்த காலங்களில், காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை, இப்படித்தான் யாருக்குமே தெரியாமல் அடிக்கடி லண்டனுக்கு கிளம்பி சென்று விடுவார். கட்சி தலைமைக்கும் தெரியப்படுத்தாமலே பறப்பார் செல்வப்பெருந்தகை. இது அப்போதே காங்கிரசில் பல சலசலப்புகளை எல்லாம் உருவாக்கியது.

    இப்போது, செல்வப் பெருந்தகை பாணியில், அமைச்சர் ராஜேஷ் குமாரும் யாருக்கும் தெரிவிக்காமல் வெளிநாடு சென்றுள்ளார். இந்தப் பயணம் அரசு முறை பயணமாக இருந்திருந்தால், தமிழக அரசின் சார்பில் செய்திக்குறிப்பு வெளியாகியிருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், இதுவரை அத்தகைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாததால், ராஜேஷ் குமாரின் பாரீஸ் பயணம் தனிப்பட்ட பயணமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    பாரீஸ் பறந்த ராஜேஷ் குமார்

    ஏற்கனவே மாணிக்கம் தாகூருடன் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படும் நிலையில், அவருக்கே தகவல் தெரிவிக்காமல் ராஜேஷ் குமார் பாரீஸ் சென்றிருப்பது கட்சிக்குள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

    அதேநேரம், ராஜேஷ்குமாரின் பாரீஸ் பயணத்தின் உண்மையான காரணம் என்ன என்பது அவர் திரும்பி வந்த பிறகுதான் முழுமையாக தெரியவரும். அரசு அனுமதி பெறப்பட்டதா, தனிப்பட்ட பயணமா, அல்லது வேறு ஏதேனும் காரணத்துக்காக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதா என்பதுதான் இப்போது எழுந்துள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.

    - நமது சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Rajesh Kumar Paris Trip.. Why Did He Fly Without Telling Anyone? Was Manickam Tagore Unaware?