சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் - 2 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. தியேட்டர்கள் திருவிழா கோலம் பூண்டிருக்கும் நிலையில், ரசிகர்களின் உற்சாகம் கரை புரண்டோடிக் கொண்டிருக்கிறது. மேலும் போஸ்டர்கள் மூலமும் பட்டையை கிளப்பி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். குறிப்பாக "12 பிஎம் பார்த்தாச்சு.. 8 சிஎம் பார்த்தாச்சு.. எப்போதும் ஒரே சூப்பர் ஸ்டார். அதனால்தான் அகிலமே சொல்லுது தலைவர் நிரந்தரம்" என்ற ரஜினி ரசிகர்களின் போஸ்டர் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'ஜெயிலர் 2' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அனிருத் இசையில் படத்தின் பாடல்களும், டிரைலரும் பெரும் வரவேற்பை பெற்றது.
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உருவாகியுள்ள இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சிகளை காண ரசிகர்கள் அதிகாலை முதலே திரையரங்குகளில் பெருமளவில் திரண்டுள்ளனர். அந்த அடிப்படையில் சென்னை தொடங்கி கன்னியகுமரி வரை திரையரங்கில் ஜெயிலர் 2 திரைப்படம் பார்ப்பதற்காக ரசிகர்கள் திரண்டுள்ளனர். திரையரங்குகளின் முன்பு ரஜினி ரசிகர்கள் மன்றத்தின் சார்பில் பிரம்மாண்டமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மட்டுமே சுமார் 2,000- க்கும் மேற்பட்ட திரைகளில் இந்தத் திரைப்படம் வெளியாகிறது. வட இந்தியாவில் மட்டும் 1,000- க்கும் மேற்பட்ட திரைகளில் 'ஜெயிலர் 2' திரைப்படம் வெளியாகிறது, குறிப்பாக, கேரளா, கர்நாடகா மற்றும் மும்பை உள்ளிட்ட பிற மாநிலங்களில் காலை 6 மணி சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில், கேரளாவில் மட்டும் சுமார் 800 திரையரங்குகளில் படம் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுவதால் திரையரங்குகளில் திருவிழா போன்ற சூழல் நிலவுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய பல மொழிகளிலும் இப்படம் பான்-இந்தியா அளவில் வெளியாக உள்ளது. ரஜினிகாந்த் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து, தேங்காய் உடைத்து பட்டாசு வெடித்து குத்தாட்டம் போட்டு ஜெயிலர் 2 திரைப்படத்தினை வரவேற்று ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக இருக்கிறது. ரஜினிகாந்த் அவர்களை சிற்பி போல செதுக்கி இருக்கின்றார் இயக்குனர் நெல்சன் அவர்கள். அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி என ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர். இது மட்டுமில்லாமல் சமூக வலைதளங்களிலும் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் போஸ்டர் மூலமும் பட்டையா கிளப்பி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். குறிப்பாக திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 12 பிஎம் பார்த்தாச்சு.. 8 சிஎம் பார்த்தாச்சு.. எப்போதும் ஒரே சூப்பர் ஸ்டார்.. அதனால்தான் அகிலமே சொல்லுது தலைவர் நிரந்தரம் என அந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், வாஜ்பாய், மோடி உள்ளிட்ட பிரதமர்களும், கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின் உள்ளிட்டோரது புகைப்படங்களும் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. ஆனால் அதில் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் புகைப்படம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஜெயிலர் 2க்கு ரூ.1,000 டிக்கெட்! ரஜினியை கலாய்த்து முதல்வர் விஜய்யை விளாசிய ப்ளூ சட்டை மாறன்
Jailer 2: தனுஷ், ஐஸ்வர்யா ஒரே தியேட்டரில்.. அரசியல் கணக்கு நினைவாகிறதா? பின்னணி விஷயம்!
Jailer 2: ஜெய்லர் 2 படத்துக்கு சிவகார்த்திகேயன் போட்ட போஸ்ட்.. தனுஷின் அதிரடி பதிவு