ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்?

  • சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ எந்த ஒரு கட்சிக்கோ, அமைப்பிற்கோ பயன்படுத்தகூடாது என்று ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு உத்தரவு பறந்துள்ளது. புதிதாக இயக்கம் தொடங்கியிருக்க கூடிய அண்ணாமலைக்கு ரஜினிகாந்தின் மறைமுக ஆதரவு இருப்பதாக வலைத்தளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வந்த நிலையில், ரஜினிகாந்த் தரப்பில் இருந்து இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    Advertisement

    ரஜினிகாந்த் புகைப்படத்தை எந்த ஒரு அமைப்பும் பயன்படுத்தக்கூடாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அகில இந்திய ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் செயலாளர் கோ.சம்பத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் பெயரையோ, அல்லது புகைப்படத்தையோ எந்த ஒரு கட்சிக்கோ அமைப்பிற்கோ பயன்படுத்தக்கூடாது என தலைவரின் உத்தரவுப்படி, ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழக பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, தனிக்கட்சி தொடங்க ஆயத்தமாகி வருகிறார். அண்ணாமலைக்கு ஆதரவாக அடிக்கப்பட்ட போஸ்டர்களில் ரஜினியின் புகைப்ப்படத்துடன் ரசிகர்கள் சிலர் ஒட்டியிருந்தனர். அதேபோல, அரசியலில் நுழைய இருப்பதாக அறிவித்துள்ள ராகவா லாரன்ஸ்க்கும் ரஜினிகாந்த் மறைமுக ஆதரவு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வந்த நிலையில், ரஜினிகாந்தின் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அண்ணாமலை தனது ஐபிஎஸ் பதவியில் இருந்து விலகிய பிறகு ரஜினிகாந்த் தனது கட்சியில் சேர அழைப்பு விடுத்ததாக அண்மையில் பேசிய வீடியோ ஒன்றில் கூறியிருந்தார். இதனால், ரஜினியின் ஆதரவு அண்ணாமலைக்கு இருப்பதாக அண்ணாமலை ஆதரவாளர்கள் வலைத்தளங்களில் கூறி வந்த நிலையில் ,ரஜினிகாந்தின் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    Advertisement

    அண்ணாமலை வி தி லீடர்ஸ் என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளார். அந்த இயக்கத்தில் தற்போது வரை 17 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இணைந்துள்ளனர். விரைவில் தனி அரசியல் கட்சியாக அண்ணாமலை தனது இயக்கத்தை மாற்றவிருக்கும் நிலையில், அவரது இயக்கத்தில் இணைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பாஜகவினர் மற்றும் ரஜினி ரசிகர்கள் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இத்தகைய சூழலில்தான், ரஜினியின் அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அண்ணாமலை ஆதரவாளர்கள் ரஜினிகாந்த் படத்தை பயன்படுத்துவதற்கு வைத்த செக் இது என்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.

    English Summary

    Rajinikanth: The All India Rajinikanth Fans Welfare Association has instructed its office-bearers and fans not to allow the actor’s name or photograph to be used by any political party or organisation. The clarification comes amid social media speculation linking Rajinikanth’s support to political figures including Annamalai and actor Raghava Lawrence.