காவிரிக்காக.. ரஜினிகாந்த் ரூ.1 கோடி கொடுப்பார்! அடித்து சொன்ன லதா ரஜினிகாந்த்!

  • சென்னை: காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த ரூ.1 கோடி கொடுப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002ல் கூறியிருந்தார். இது குறித்து பேசிய அவரது மனைவி லதா ரஜினிகாந்த், நிச்சயம் ரஜினிகாந்த் நிதியை கொடுப்பார் என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    இன்று சென்னை சேத்துப்பட்டில் 'மக்கள் மேடை' அமைப்பு சார்பில், பாரத சேவா இணையதள தொடக்கவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசியிருந்த லதா ரஜினிகாந்த், ரஜினியின் நிதி உதவி குறித்து பேசியிருக்கிறார்.

    Advertisement

    காவிரி இணைப்பு திட்டம்

    நாட்டின் தென் பகுதியில் உள்ள மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு மற்றும் காவிரி ஆகியவற்றை கால்வாய்கள் மூலம் இணைக்கும் திட்டத்திற்கு பெயர்தான் காவிரி இணைப்பு திட்டம்.

    சில இடங்களில் மழை அதிகமாகவும், சில இடங்களில் மழை குறைவாகும் பெய்யும். அப்படி பெய்யும்போது ஒரு சில நதிகளில் நல்ல நீரோட்டமும், சில நதிகளில் வறட்சியும் இருக்கும். எனவே, உபரி நீரை மற்ற நதிகளுக்கு திருப்பி விடும் திட்டம்தான் காவிரி நீர் இணைப்பு திட்டாமாகும். இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், தமிழகத்தின் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்கள் வறட்சியிலிருந்து தப்பிக்கும். இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனில், ரூ.1 கோடி வழங்கப்படும் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.

    Advertisement

    இப்படி இருக்கையில் இன்று சேத்துப்பட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த லதா ரஜினிகாந்த், செய்தியாளர்களை சந்திந்தபோது ரஜினிகாந்த் நிச்சயம் நிதி உதவி செய்வார் என்று கூறியிருக்கிறார்.

    அவர் பேசியதாவது, "நாட்டுப்பற்று எல்லாவற்றையும்விட பெரியது. ரஜினிகாந்தின் ஆதரவை விட அவரது ஆசீர்வாதம்தான் எனக்கு முக்கியம். காவிரி இணைப்பு திட்டம் எந்த நேரத்தில் செயல்படுத்தப்படுகிறதோ அப்போது ரஜினிகாந்த் சொன்னதை செய்வார் என்று கூறியிருக்கிறார்.

    English Summary

    Rajinikanth: Actor Rajinikanth had stated in 2002 that he would contribute ₹1 crore towards the implementation of the Cauvery interlinking project. Speaking on the matter, his wife, Latha Rajinikanth, affirmed that he would certainly provide the funds.