கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் விவகாரம்! ராஜ்மோகன் விளக்கம்

  • சென்னை: கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் ஆட்சியர் புகார் அளித்தால் முதல்வர் விஜய் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார், இதில் எந்த பாரபட்சமும் பார்க்கப்படாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து புரசைவாக்கத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியிருப்பதாவது: தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் முடிவடைந்துவிட்டன. இந்த 6 மாத காலம் என்பது நல்ல தொடக்கம். ஒரு நல்ல தொடக்கம் பாதி வெற்றி என்பார்கள்.

    Advertisement

    இந்த நேரத்தில் கங்காதீஸ்வரர் கோயில் தெருவில் ஆண்கள் பள்ளிக் கூடத்திற்காக ஒரு புதிய கட்டடத்தை கட்டி கொடுத்துள்ளோம். அதை இன்று திறந்து வைத்துள்ளோம். ஸ்மார்ட் வகுப்பறைகள், டைல்ஸ் வேலைப்பாடுகளுடன் கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. காலை உணவு திட்டம் சமைப்பதற்காகவும் ஒரு தனி இடம் கட்டப்பட்டு இன்று பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.

    கனிமொழி சொன்ன அதே டங் ஸ்லிப்.. இப்போது கள்ளக்குறிச்சி அருள் விக்னேஷும்

    விஜய் ஆட்சியில் இந்த புதிய பள்ளிக் கூடமும் மைல்கல்லாக தெரிகிறது. கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது குறித்து கேட்கிறீர்கள். முதல்வரின் ஆட்சியில் யாராக இருந்தாலும் குற்றச்சாட்டுக்குள்ளானால் விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எந்த பாரபட்சமும் இருக்காது.

    Advertisement

    புகார் அளித்தால் நடவடிக்கை

    சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால் முழுமையாக விசாரணை நடத்தி அவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. சட்டம் ஒழுங்கை பொருத்தமட்டில் முன்பை விட ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. திட்டமிட்டு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடிய ரவுடிகளை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்திருக்கிறார்கள்.

    கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு தவெக எம்எல்ஏ மெசேஜ்? கனிமொழி கண்டனம்.. அருள் விக்னேஷ் மறுப்பு

    மக்களுக்குத் தேவையான பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு உணர்வையும் அரணையும் காவல் துறை எப்போதும் வழங்கும்.

    Advertisement

    கொலை, கொள்ளை சட்டம் ஒழுங்கு

    கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணமே நெடுநாளாக இருக்கும் போதை பழக்க வழக்கம்தான். அதை வேரோடு சாய்ப்பதற்காக அடிக்கடி கிடைக்கக் கூடிய உளவுத் துறை தகவலை வைத்து ரெய்டு நடத்தப்படுகிறது. போதை ஒழிக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு மேம்படுத்தப்படும். இவ்வாறு ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

    மது போதையில் எஸ்எம்எஸ்

    கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மது போதையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அவரது அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்று தொந்தரவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி அது சமூகவலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் கட்சியினரும் நெட்டிசன்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

    Advertisement

    அருள் விக்னேஷ் மறுப்பு

    தவெக ஆட்சியில் ஒரு ஆட்சியருக்குக் கூட பாதுகாப்பு இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணியும் இதை கண்டித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை கோரியுள்ளார். இதை கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மறுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: "உயர் பதவியில் இருக்கும் ஆட்சியரின் வீட்டிற்கு சென்று தொந்தரவு செய்ய முடியுமா? அவருக்கு நான் எந்த தவறான நோக்கிலும் மெசேஜ் அனுப்பவில்லை" என அருள் விக்னேஷ் மறுத்துள்ளார்.