பணம் கேட்டு மிரட்டினேனா? உண்மையைச் சொன்னதால் பொய்ப் புகார்.. இதக ராம.ரவிக்குமார் விளக்கம்!

  • சென்னை: இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவரான ராம.ரவிக்குமார் தொழிலதிபர்களை மிரட்டுவதாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கோயில் பெயரில் முறைகேடாக டிரஸ்ட் ஆரம்பித்து பணம் வசூலிப்பதை வெளிக்கொண்டு வந்ததால் தன்னைக் குறித்து அவதூறு பரப்புவதாக விளக்கம் அளித்திருக்கிறார் ராம.ரவிக்குமார்.

    Advertisement

    திண்டுக்கல் நகரின் மையப் பகுதியில் புகழ்பெற்ற அபிராமி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் முன்னாள் அறங்காவலராக வீரகுமார் என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

    Advertisement

    அதில் இந்து தமிழர் கட்சியின் தலைவரான ராம.ரவிக்குமார் தன்னைக் குறித்தும் தனது பணிகள் குறித்தும் முகநூலில் அவதூறாக பதிவிட்டு வருவதாகவும் தன்னிடம் பணம் கேட்டு தராததால் தன்னை பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    இந்த நிலையில் இன்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தென் தமிழக தலைவரான அம்பி என்ற ராமகிருஷ்ணன் ராம ரவிக்குமார் மீது புகார் அளித்திருந்தார். அதில் கோவில் பணிகளில் பங்கேற்க அனுமதிக்காததால் விசுவ இந்து பரிசத் குறித்தும் தங்களது அமைப்பு குறித்தும் ராம ரவிக்குமார் அவதூறு பரப்பி வருவதாக கூறியிருந்தார்.

    Advertisement

    இந்த நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்து இருக்கிறார் ராம ரவிக்குமார். அதில், என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்த அரவிந்தா செல்போன் வீரக்குமார் முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் திண்டுக்கல் அருள்மிகு காளகத்தீஸ்வரர் திருக்கோவில் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை விதிகளுக்கு புறம்பாக கோவில் தெய்வம் பெயரை பயன்படுத்தி தனிநபர் அறக்கட்டளை ஆகியவை ஏற்படுத்தி வசூல் செய்வது சட்ட விரோதம் .

    இருந்தாலும் "திண்டுக்கல் மலைக்கோட்டை ஸ்ரீ அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் ஆலய பாதுகாப்பு பேரவை ட்ரஸ்ட் "என்ற பெயரில் வசூலில் ஈடுபடும் வசூல் கும்பல் மதன் வெங்கடேசன், NS கோவிந்தராஜன், எல்ஐசி கணேசன் , ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட நபர்கள் மீது இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அனைவரிடமும் புகார் தெரிவித்தேன் . " விசுவ ஹிந்து பரிஷத் "பெயரை தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்தும் மேற்படி நபர்கள் மீது "விஸ்வ இந்து பரிஷத்" தக்க நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகிறேன்." என கூறியுள்ளார்.

    English Summary

    Hindu Tamilar Katchi leader Rama Ravikumar rejects extortion allegations and claims he exposed irregularities linked to a temple trust.