ராமதாஸ் முடிவால் கடும் அப்செட்.. தனுஷ் கட்சியில் ஐக்கியமாகும் ராமதாஸ் மகள் காந்திமதி?

  • சென்னை: நடிகர் தனுஷ் விரைவில் அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்டு இருக்கும் நிலையில் அவரது கட்சியில் ராமதாஸ் மகள் காந்திமந்தி இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மனக்கசப்பில் இருந்த ராமதாஸ் - அன்புமணி மீண்டும் இணைந்ததால், கடும் அப்செட்டில் இருந்த காந்திமந்தி, இந்த முடிவுக்கு வந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    பாமக நிறுவனர் ராமதாஸ்க்கும் அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணிக்கும் இடையே கடந்த ஆண்டு கருத்து மோதல் ஏற்பட்டது. பாமக தனக்கே சொந்தம் என்றும் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் ராமதாஸ் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    Advertisement

    தேர்தல் ஆணையம் முடிவு அன்புமணிக்கே சாதகமாக இருந்ததால், ராமதாஸ் தனி அணியாக செயல்பட்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக செல்வாக்காக உள்ள இடங்களில் வேட்பாளர்களையும் நிறுத்தினார். சசிகலாவுடன் கூட்டணி அமைத்து ராமதாஸ் தரப்பு தேர்தலில் போட்டியிட்டது. எனினும், தேர்தலில் படுதோல்வியே மிஞ்சியது.

    சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அன்புமணிக்கும் ராமதாஸ்க்கும் இடையே மனக்கசப்பு நீங்கியது. ராமதாஸின் தைலாபுரம் இல்லத்திற்கு சென்ற அன்புமணி தந்தையை சந்தித்து கருத்து வேறுபாடுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதையடுத்து அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ராமதாஸ் அறிவித்தார். தந்தையின் இந்த திடீர் முடிவால் அவரது மகள் காந்தி மந்தி கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

    Advertisement

    ராமதாஸ் ஆதரவாளர்களாக இருந்த ஜி.கே.மணி, அருள் உள்ளிட்ட சிலரை தவிர, மற்ற நிர்வாகிகள் அன்புமணியுடன் இணைந்தனர். ராமதாஸ் - அன்புமணி மீண்டும் இணைந்ததால், அப்செட் ஆன காந்திமந்தி தனி இயக்கம் தொடங்க திட்டமிட்டு வருவதாக அண்மையில் அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. இந்த நிலையில்தான், நடிகர் தனுஷ் அரசியல் எண்ட்ரிக்கு ஆயத்தமாகி வரும் நிலையில், அவரது கட்சியில் இணைய காந்திமந்தி திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பத்திரப்பதிவு, நில அளவைப் பணிகளை தனியார்மயமாக்கும் முயற்சி ஆபத்தானது! எச்சரிக்கும் அன்புமணி!

    இதற்காக தனுஷை சந்திக்க நேரம் கேட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், இது தொடர்பாக காந்திமதி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. காந்திமதியை கட்சியில் சேர்த்தால், வட மாவட்டங்களில் தனது அரசியல் கட்சிக்கு வலு சேர்க்கும் என தனுஷ் தரப்பும் கருதுவதாகவும் அரசியல் விமர்சர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

    Advertisement

    நடிகர் தனுஷ், தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியுள்ள நிலையில், கட்சி தொடங்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிகிறது. தமிழக எழுச்சிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்க உள்ளதாக பரபரப்பாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதேநேரத்தில் தனுஷ் அதிமுகவில் இணையக்கூடும், பாஜக ஆதரவோடு அரசியல் பயணத்தை தொடங்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். எது எப்படியோ, தனுஷ் அறிவித்த பிறகே அவரை பற்றி எழும் இந்த யூகங்களுக்கு விடை கிடைக்கும்.

    English Summary

    Gandhimathi: With actor Dhanush planning to launch a political party soon, it is reported that Gandhimathi—the daughter of Ramadoss—intends to join it. It is said that Gandhimathi, who was deeply upset by the reconciliation between Ramadoss and Anbumani (following a period of estrangement), has decided to take this step.