ராமாயணம் படத்தில்.. ராவணன்தான் ஹீரோ! நல்லவராக கட்டப்பட்ட பாத்திரம்! குமுறும் வடஇந்தியர்கள்

  • சென்னை: இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ராமாயணம்' திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் பிரம்மாண்டம், நடிகர்களின் நடிப்பு, சென்டிமென்ட் காட்சிகள் எல்லாமே ரசிகர்களைக் கவர்ந்திருந்தாலும், சமூக வலைதளங்களில் ஒரு மிகப்பெரிய விவாதம் சூடுபிடித்துள்ளது. அதுவும் முக்கியமாக வடஇந்தியர்களின் சமூக விவாதங்களில் ஒரு விஷயம் விவாதம் ஆகி உள்ளது.. அது.. படத்தில் நடிகர் யாஷ் நடித்துள்ள ராவணன் கதாபாத்திரம் காட்டப்பட்ட விதம் தான்.

    Advertisement

    ராமாயணக் கதையில ராமரையே ஓரங்கட்டிட்டு, படக்குழு முழுக்க முழுக்க ராவணனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. சொந்தக் கதையிலேயே ராமர் ஏதோ கெஸ்ட் ரோல் மாதிரி வர்றாரு என்று இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் கடுமையாகப் பேசி வருகிறார்கள். இது கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லப்பட்ட கருத்து என்றாலும், இதில் நியாயமே இல்லை என்று ஒதுக்கிவிடவும் முடியாது.

    Advertisement

    இணையத்தில் வெடித்த சர்ச்சை

    சமூக வலைதளங்களில் இந்தப் படத்தைப் பற்றிப் பலவிதமான விமர்சனங்கள் வந்து குவிகின்றன. சிலர், ராவணனை ரொம்ப நல்லவன் மாதிரி காட்டிட்டாங்க.. ராமரை பலமில்லாதவர் போல சித்தரிச்சிட்டாங்க.. தேவர்களை கெட்டவர்களாகவும், சூர்ப்பனகையை ஏதோ பாவம் பாதிக்கப்பட்ட பெண் போலவும் மாத்திட்டாங்க.. என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

    இன்னும் சிலரோ ..நமக்குத் தெரிஞ்ச ராமாயணம் எப்போதுமே ராமரோட கதை. ஆனா தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா எடுத்திருக்கிற இந்த ராமாயணம் ராவணனோட கதையாகவே மாறிடுச்சு.. என்று சொல்லி, ராமனாக நடித்த ரன்பீர் கபூரின் நடிப்பு மற்றும் வசனங்களை விமர்சித்து வருகிறார்கள்

    Advertisement

    ராவணனுக்குக் கிடைத்த தனி மரியாதை

    படத்தில் ராவணன் எப்படி உருவானான் என்ற அவனது ஆரம்ப கால வாழ்க்கையை ஒரு தனிப் படத்திற்கான முக்கியத்துவத்தோடு காட்டியிருக்கிறார்கள். ராவணனின் குலம் தேவர்களால் கொடுமைப்படுத்தப்படுவது, கடவுளான குபேரனிடம் அடிமைப்பட்டு கிடப்பது, பிறகு அவங்களுக்கு எதிராக ராவணன் திரண்டு எழுவது, புரட்சி செய்வது, கடுமையான தவம் செய்து பல வரங்களை வாங்கி கடைசியில் இலங்கைக்கே அரசனாவது என அவனது வளர்ச்சியைப் படம் அக்குவேறு ஆணிவேறாக விளக்குகிறது.

    அப்படியானால், ராவணனை ரொம்ப நல்லவனாக மாற்றிவிட்டார்களா என்று கேட்டால், அப்படி முழுமையாகச் சொல்ல முடியாது. அவனுக்குள் இருக்கும் அகங்காரத்தையும் திமிரையும் படம் மறைக்கவில்லை. தன் சொந்த தங்கை சூர்ப்பனகையின் கணவனான வித்யுத்ஜிஹ்வாவை, ஒரு சின்ன பிரச்சனைக்காக ராவணன் இரக்கமில்லாமல் கொன்று விடுகிறான்.

    Advertisement

    தன் சுயகௌரவத்துக்காக சொந்தக் குடும்பத்தையே கொல்பவன் ஒருபோதும் நல்லவன் கிடையாது, அவன் ஒரு கொடுங்கோலன் என்பதை இந்தப் படம் தெளிவாகவே காட்டுகிறது. அதேபோல், ராவணனின் பத்து தலைகளை அவனது மனசுக்குள் பேசும் பத்து விதமான ஆளுமைகளாகக் காட்டியிருப்பது நன்றாக அமைந்திருந்தது.

    வால்மீகி ராமாயணம் சொல்வது என்ன?

    இந்த படத்தில் சீதையை ராவணன் கடத்துவதற்கு முக்கியக் காரணமே, அவனது தங்கை சூர்ப்பனகை அவமானப்படுத்தப்பட்டது தான் என்று காட்டப்படுகிறது. ராமனும் லட்சுமணனும் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து அவமானப்படுத்துவதும், அவள் அண்ணனிடம் வந்து அழுது நியாயம் கேட்பதும் தான் போருக்கான தொடக்கமாக அமைகிறது. சூர்ப்பனகைக்கு நியாயமான கோபம் இருப்பதாகக் காட்டியிருப்பதில் தப்பில்லை.

    Advertisement

    ஆனால், மூலக்கதையான வால்மீகி ராமாயணம் வேறு ஒரு முக்கியமான காரணத்தைச் சொல்கிறது. வால்மீகி எழுதிய கதையில், சூர்ப்பனகை ராவணனிடம் வந்து சீதையின் அழகைப் பற்றிப் புகழ்ந்து தள்ளுகிறாள். "

    சீதையைப் பார்த்தாலே யாருக்கும் ஆசை வரும்.. அவளை உன் மனைவியாக்கிக்கோ.. ராம-லட்சுமணர்களைக் கொன்றுவிட்டு சீதையைத் தூக்கிட்டு வா" என்று ராவணனின் காமத்தைத் தூண்டிவிடுகிறாள்.

    அதேபோல், சீதையைக் கடத்த துறவி வேடத்தில் ராவணன் வரும்போது கூட, சீதையின் பேரழகில் மயங்கி, அவளை எப்படியாவது அடைய வேண்டும் என்ற கண்மூடித்தனமான ஆசையிலேயே கடத்துகிறான் என்று வால்மீகி தெளிவாக எழுதியுள்ளார். தங்கைக்காகப் பழிவாங்குவது ஒரு காரணமாக இருந்தாலும், சீதை மீதான அவனது பேராசையும் அகம்பாவமும் தான் கடத்தலுக்கு மிக முக்கியமான காரணம்.

    Advertisement

    ஆனால், இந்தப் படத்தில் ராவணன் பழிவாங்குவதற்காக மட்டுமே சீதையைக் கடத்தியது போலக் காட்டியிருப்பதால், பார்வையாளர்களுக்கு அவன் மீது ஒரு அனுதாபம் வந்துவிடுகிறது. தங்கைக்காக நியாயம் கேட்கும் ஒரு பாசக்கார அண்ணன் போல மட்டுமே அவன் தெரிந்துவிடுகிறான். பத்து தலை காட்சியில் அவன் சீதை மீது கொண்ட ஆசையைப் பற்றி ஒரு தலை பேசினாலும், அது சாதாரணமாகக் கடந்து போய்விடுகிறது.

    அயோத்தி காட்சிகளும் ராமரின் நிலையும்

    ரசிகர்களின் அடுத்த பெரிய ஆதங்கம், ராவணனுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் பாதி கூட ராமருக்குக் கிடைக்கவில்லையே என்பதுதான். ராவணனின் வம்சம், அவனது லட்சியம், அதிகார வளர்ச்சி என்று எல்லாவற்றையும் மெனக்கெட்டு காட்டியவர்கள், ராமரின் வாழ்க்கையை மிக வேகமாக சில முக்கியக் காட்சிகளோடு முடித்துவிட்டார்கள். ராமரின் திருமணம், காட்டுக்குக் கிளம்புவது போன்ற எமோஷனலான தருணங்களுக்குப் போதிய நேரம் ஒதுக்கப்படவில்லை.

    இருந்தாலும், ராமன்-லட்சுமணன் பாசம், சீதை-ராமன் காதல் போன்ற சில காட்சிகள் பார்ப்பதற்கு ரொம்ப அழகாக வந்திருக்கின்றன. குறிப்பாக, தன் அண்ணனோடு நானும் காட்டுக்கு வருவேன் என்று லட்சுமணன் பிடிவாதம் பிடிக்கும் காட்சி மனதைத் தொடுகிறது.

    ஆனால், ராமாயணக் கதையிலேயே பெரிய பங்கு இல்லாத ராவணனின் தங்கை கணவனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, தசரதனின் தவிப்பு மற்றும் ராமன் நாட்டை விட்டுப் போகும் அந்தப் பெரும் துயரக் காட்சிகளை இவ்வளவு அவசரமாகக் கடந்து சென்றிருக்கக் கூடாது.

    அதே சமயம், இதனால் ராமர் பலவீனமானவர் என்று சொல்லிவிட முடியாது. ராவணன் வாங்கிய வரத்தின்படி அவனை எந்தத் தேவனாலும், அசுரனாலும் கொல்ல முடியாது. மனிதர்களை அவன் அற்பமாக நினைத்ததால், அவங்ககிட்ட இருந்து மட்டும் பாதுகாப்பு கேட்கவில்லை. அதனால் தான் மகாவிஷ்ணுவே ஒரு சாதாரண மனிதனாக அவதாரம் எடுத்து பூமிக்கு வந்தார்.

    முதல் பாகமும் அடுத்த எதிர்பார்ப்பும்

    சினிமாவைப் பொறுத்தவரை, வில்லன் பயங்கர பலமாக இருந்தால் தான் நாயகன் அவனை ஜெயிக்கும் போது ரசிகர்களுக்கு ஒரு திருப்தி கிடைக்கும். அந்த வகையில் ராவணனைப் பலமாக காட்டியதில் தப்பில்லை. அதேபோல், ராவணனின் கடந்த காலத்தைக் காட்டியதால் மட்டுமே அவன் செய்த தவறை நியாயப்படுத்திவிட முடியாது.

    இது வெறும் முதல் பாகம் தான். ராமனுக்கும் ராவணனுக்கும் இடையிலான உண்மையான யுத்தம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. வரப்போகும் இரண்டாவது பாகத்தில், ராமரின் உணர்வுகளுக்கும் அவரது கம்பீரத்துக்கும் உரிய முக்கியத்துவம் கிடைக்கும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலா

    English Summary

    Ramayana Movie Review Controversy: Why Yash’s Ravana Portrayal Sparks Debate Over Ranbir Kapoor’s Rama