ரம்பை இலையின் 10 நன்மைகள்.. பால்கனியில் சுலபமாக வளர்ப்பது எப்படி? இந்த சின்ன தவறை மட்டும் பண்ணாதீங்க

  • சென்னை: ரம்பை இலை எனப்படும் பாண்டான் இலை, பல ஆச்சரியங்களை தன்னுள் ஒளித்து வைத்துள்ள மூலிகை இலையாகும்.. தென்கிழக்கு ஆசிய சமையலிலும் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளிலும் நறுமணத்திற்காகவும் சுவைக்காகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு அற்புதமான மூலிகை இலையாகும்... பிரியாணி, நெய் சோறு, பாயாசம், கேசரி போன்ற உணவுகளில் இந்த இலையை சேர்ப்பார்கள்.. ஆனால் அதற்காக மட்டுமே இவைகள் பயன்படுவதில்லை.. இன்ன பிற மருத்துவ நன்மைகளையும் இங்கு பார்ப்போம்.

    Advertisement

    ரம்பை இலை பசியை தூண்டக்கூடியது.. இயற்கையிலேயே இதில் வைட்டமின் C மற்றும் உடலுக்கு நன்மையளிக்கும் தாவரச் சத்துகள் அதிகளவில் நிறைந்துள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, அடிக்கடி நோய்வாய்ப்படுவதில் இருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. மேலும், இதில் உள்ள சக்திவாய்ந்த சத்துகள் உடலின் செல்களைப் பாதுகாத்து, இதய ஆரோக்கியத்தைச் சீராக வைத்திருக்க பெரிதும் உதவுகின்றன.

    Advertisement

    சர்க்கரை நோயாளிகள்

    ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த ரம்பை இலை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன் இலையைக் கொதிக்க வைத்த நீரைக் குடித்து வருவது சர்க்கரை அளவை சீராக்க உதவும் என்றாலும், இது நீரிழிவு நோய்க்கான மருந்துகளுக்கு முழுமையான மாற்றாகாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இந்த இலை பயன்படுகிறது.

    செரிமான பிரச்சினைகளுக்கு ரம்பை இலை சிறந்த தீர்வாக அமைகிறது. வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்று உப்புசம் போன்ற கோளாறுகளால் அவதிப்படுபவர்கள், ரம்பை இலை தேநீர் அல்லது இதன் சாற்றை குடிப்பதன் மூலம் உடனடி நிவாரணம் பெறலாம். இது உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றி, கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

    Advertisement

    மூட்டு வலி, சரும சுருக்கம் நீங்க

    உடலில் ஏற்படும் மூட்டு வலி, வீக்கம் மற்றும் வாத நோய்களுக்கு இந்த இலையிலிருந்து எடுக்கப்படும் சாறு அல்லது எண்ணெயைத் தடவும்போது வலி குறைகிறது. அதேபோல, மன அழுத்தத்தை குறைத்து, இரவு நேரத்தில் நல்ல அமைதியான தூக்கத்தை தருவதற்கும் இதன் இயற்கையான வாசனை உதவுகிறது.

    சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பில் ரம்பை இலைக்கு முக்கியப் பங்கு உண்டு. இதன் இலையை பேஸ்ட் போல அரைத்து சருமத்தில் தடவி வந்தால் சரும எரிச்சல் தணிந்து தோலுக்கு நல்ல பொலிவு கிடைக்கும். அதேபோல தோல் சுருக்கங்களும் மறைந்து தோலுக்கு நல்ல பொலிவு கிடைக்கும் தலைமுடியில் ஏற்படும் பொடுகு தொல்லையை போக்கவும், வேர்க்கால்களை வலுப்படுத்தி முடி உதிர்வைக் குறைக்கவும் இதன் சாறு பயன்படுகிறது.

    Advertisement

    ரம்பை இலை எப்படி வளர்க்கலாம்

    ரம்பை இலையை வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம்.. போதிய ஈரப்பதமும் இருந்தால் இது தொட்டிகளிலேயே அழகாக படர்ந்து வளரும். மண்ணில் எப்போதும் லேசான ஈரப்பதம் இருந்தால் மட்டுமே போதும். தினமும் அதிகளவில் தண்ணீர் ஊற்றி மண்ணை சேறாக்க வேண்டிய அவசியமில்லை..

    மேல் மண் காய்ந்த பிறகு மிதமாக தண்ணீர் தெளித்தாலே போதுமானது. இதற்கு கடுமையான வெயில் தேவைப்படாது. மிதமான நிழல் இருந்தால் போதும்.. வீட்டின் பால்கனி, சின்ன தொட்டிகளில் வைத்தால் எளிதாக படர்ந்து வளர்ந்துவிடும்.

    சமையலில் எப்படி பயன்படுத்தலாம்

    சமையலில் பயன்படுத்தும்போது, இலையை நன்றாகக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கியோ அல்லது முடிச்சாகப் போட்டோ கொதிக்கும் உணவில் சேர்க்கலாம். உணவை இறக்குவதற்கு முன் இந்த இலையை எடுத்துவிடலாம், ஏனெனில் இதன் நறுமணமும் சுவையும் உணவில் ஏற்கனவே இறங்கியிருக்கும். இயற்கையான பச்சை நிறமியாகவும் சமையலில் இந்த இலையின் சாறு பயன்படுத்தப்படுகிறது.

    Advertisement

    தினசரி உணவில் அளவோடு ரம்பை இலையைச் சேர்த்துக்கொள்வது உடலை நோய்களின்றி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

    English Summary

    Rambai Leaves 10 Health Benefits.. How to Grow Rambai at Home Without This Common Mistake?