சென்னை: வீரமணி விவகாரத்தில் சிறுமிகள் மீதான பாலியல் வீடியோவை தான் எடுக்கவில்லை என சாந்தி தெரிவித்ததாகவும் தன் மீதான சந்தேகத்தால் கணவர் வைத்த ரகசிய கேமராவில் அந்த வீடியோ பதிவானதாகவும் தன்னிடம் அவர் தெரிவித்தாக தமிழக காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஞ்சன் குமார் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: ஜான்பாண்டியனும் சாந்தியும் பேசிக் கொண்டிருந்த போது நடந்த வாக்குவாதத்தின்போதுதான் வீரமணி என்பவர் யார் எனபது எனக்கு தெரியும்.
வீரமணிக்கும் சாந்திக்கும் என்ன தொடர்பு. வீரமணியிடம் சாந்தி மிரட்டி பணம் பெற்றது எல்லாம் எனக்கு தெரியவந்தது. சாந்தி பணம் வாங்கிய விஷயத்தை ஜான் பாண்டியன்தான் தெரியப்படுத்தினார். அவர்களுக்கிடையேயான வாக்குவாதத்தின் போது, "ஏற்கெனவே ஜனவரியில் ஒரு பெரிய தொகையை வீரமணி உனக்கு கொடுத்தாராமே மா! இதே வேளையாக பணம் கேட்டால் எப்படி5" என சாந்தியை ஜான் பாண்டியன் கடிந்து கொண்டார். "வீரமணிக்கும் எனக்கும் பிறந்த மகன் அமெரிக்காவில் இருக்கிறார். அவருக்கு மருத்துவ சிகிச்சைக்காகத்தான் நான் பணம் கேட்டேன்" என சாந்தி, ஜான் பாண்டியனிடம் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டேன். அதற்கு ஜான் பாண்டியன், "இல்லை நீ ஏதோ வீடியோவெல்லாம் அனுப்பி காசு கேட்கிறாயாமே, இதையெல்லாம் செய்யக் கூடாது " என ஜான் பாண்டியன் சொன்னதற்கு, சாந்தி நான் சட்டரீதியாக பார்த்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். அதற்கு ஜான் பாண்டியன், பார்த்துக் கொள் என்றார். இதன் பிறகு நான் இனி இதில் தலையிடமாட்டேன் என சாந்தியிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டேன். சாந்தியும் ஜான்பாண்டியனும் சந்தித்தது உண்மைதான். ஜான் பாண்டியனும் சாந்தியும் சந்திப்பு நடந்த பிறகு, சாந்தி எனக்கு 2 நாட்கள் கழித்து போன் செய்தார். "சார் என்னை உங்களிடம் ஜான் பாண்டியன் தவறாக சித்தரிக்க முயற்சிக்கிறார். என்னை பார்க்க வேண்டும்" என சாந்தி கேட்டார். அதற்கு நான், "இதன் பிறகு உங்களை பார்ப்பதற்கு எந்த விஷயமும் இல்லை" என்றேன். தயவு செய்து வாங்க என கண்ணீர் விட்டு அழுது அவரது தேனாம்பேட்டை வீட்டிற்கு என்னை அழைத்தார். எனக்கு உடல்நிலை சரியில்லாததால் நான் 10 நாட்கள் கழித்து அவருடைய வீட்டிற்கு சென்றேன். அப்போது சாந்தி என்னிடம் சொன்னது, "சார் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வீடியோவை நான் எடுக்கவில்லை. எனக்கும் வீரமணிக்கும் தொடர்பிருப்பதாக எனது கணவர் சந்தேகப்பட்டு எங்களை கையும் களவுமாக பிடிக்க கேமராவை கணவர்தான் வைத்திருந்தார். இது தெரியாமல் வீரமணி ஒரு சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது ரெக்கார்டு ஆகிவிட்டது. நான் வேண்டுமென்றே எடுக்கவில்லை" என்றார். உடனே என்னை சாந்தி ஒரு அறைக்கு அழைத்து சென்று அங்கு டிவியில் வீரமணி தொடர்பான வீடியோவை ஆன் செய்து விட்டு அவர் அறையை விட்டு வெளியே சென்றுவிட்டார். அப்போது அந்த வீடியோவை பார்த்த போதுதான் அவர் வீரமணி என்பது எனக்கு தெரியவந்தது. அதை அப்படியே நான் எனது செல்போனில் வீடியோவாக எடுத்துக் கொண்டேன். அப்போது சாந்தி உள்ளே வந்துவிட்டதால் நான் வீடியோவை ஆஃப் செய்துவிட்டேன். 2, 3 நிமிடங்கள் வீடியோவை எடுத்தேன். இதையடுத்து சாந்தி என்னிடம் மீண்டும் விளக்கம் அளிக்க முயன்றார். ஆனால் அதற்கு நான் விடவில்லை, இனி இந்த விவகாரத்தில் நான் வரவில்லை என கூறிவிட்டேன். மேலும் இந்த வீரமணி செய்த தவறுகள் உங்களுக்கு (சாந்தி)தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதை தெரிவித்துவிட்டு வந்துவிட்டேன். அவர் எதற்காக வீடியோவை காட்டினார் என எனக்கு தெரியாது. இவ்வாறு ரஞ்சன் குமார் தெரிவித்திருந்தார். மேலும் நாளை பிரஸ் மீட் வைப்பதாகவும் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.