கண்களுக்கு விருந்து.. நெருக்கமாக வரும் வியாழன் மற்றும் வெள்ளி! மிஸ் பண்ணாதீங்க

  • சென்னை: ஒன்பது கோளும் ஒன்றாய் காண.. நம் வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தாலே தெளிவாய் தெரியும். அதிலும், ஜூன்.9ம் தேதியன்று பெரிய அண்ணன் வியாழன் கோளும், பூமியின் சகோதரி வெள்ளி கோளும் நெருக்கமாக பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

    Advertisement

    சூரியன், அதை சுற்றி 8 கோள்கள் என பாட புத்தகத்தில் படித்திருப்போம். இதில் இருப்பதிலேயே ரொம்பவும் பெருசு வியாழன் கோள்தான். ரெண்டாவது சூரியனா வர வேண்டிய ஆளு! ஜஸ்ட் மிஸ்ஸாகி வெறும் கோளாய் மாறிட்டாரு.

    Advertisement

    அந்த காலத்துல லைட் பொல்யூஷன் கிடையாது. அதனால சனி கிரகம் வரைக்கும் வெறும் கண்ணால் பார்க்க முடிஞ்சது. இப்போது அப்படி இல்லை. இருந்தாலும், வருஷத்துக்கு சில நாட்கள் மட்டும் வியாழன் அண்ணன் பிரகாசமாய் நமக்கு காட்சி கொடுப்பார். அதுவும் இந்த முறை வெள்ளி கோளுடன் சேர்த்து பார்க்க முடியும்.

    எங்கு பார்க்கலாம்?

    ஜூன்.9ம் தேதியன்று மாலை சூரியன் மறைந்த பிறகு, வடமேற்கு திசையில் ரெண்டு கோள்களும் ஜோடியாய் இருப்பதை பார்க்க முடியும். வெறும் கண்களால் இதை பார்க்கலாம். வெள்ளி நமக்கு பக்கத்தில் இருப்பதால் பளிச் என்றும், வியாழன் கொஞ்சம் தள்ளி இருப்பதால் மங்கலாகவும் இருக்கும். சூரியன் மறைவுக்கு பிறகு சுமார் 1 மணி நேரம் வரை பார்க்க முடியும்.

    Advertisement

    உண்மை என்ன?

    உண்மையில் இந்த இரண்டு கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் இல்லை. வியாழனுக்கும், வெள்ளிக்கும் வார நாட்களில் வேண்டுமானால சம்பந்தம் இருக்கலாம். ஆனால், வானியல் விஷயத்தில் அப்படி கிடையாது. இரண்டு கோள்களுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை. அது எங்கேயோ இருக்கிறது.. இது எங்கேயோ இருக்கிறது. இருந்தாலும், பூமியிலிருந்து பார்க்கும்போது ரெண்டும் ஒரே நேர்கோட்டில் இருப்பதை போன்று தோன்றுகிறது.

    கூட்டத்தில் ஐக்கியமாகும் புதன்

    இந்த நிகழ்வின் உச்சமாக, புதன் கிரகமும் வெள்ளி மற்றும் வியாழனுடன் ஒரே நேர்க்கோட்டில் இணைய இருக்கிறது. ஜூன்.11 முதல் 15 வரை புதன் கிரகமும் இந்த இரண்டு கோள்களுடன் ஒரே நேர்கோட்டில் இருக்கும். ஆனால் புதன் கிரகத்தை பார்ப்பது கொஞ்சம் கஷ்டம். தொடு வானத்தில்தான் புதன் கிரகம் தெரியும். அதுவும் கொஞ்ச நேரத்துக்குதான்.

    Advertisement

    இந்த மேஜிக் இத்துடன் நிற்பதில்லை. மாறாக, பிறை நிலவும் இந்த பிளானட் பரேடில் இணைய இருக்கிறது. ஜூன்.16-17 தேதிகளில் இந்த நிகழ்வு நடக்க இருக்கிறது. எனவே யாரும் இதை மிஸ் செய்ய வேண்டாம்.

    English Summary

    Celestial Alignment: You don't need to travel all the way to Pillaiyarpatti to see all nine planets together; they can be clearly viewed right from our own terraces. Scientists have stated that on June 9th, in particular, Jupiter—the 'big brother' planet—and Venus—Earth's sister planet—will be visible in close proximity to each other.