DMK: ஓய்வை நோக்கி உதயசூரியன்! இனி முதல்வராகும் யோகம் ஸ்டாலினுக்கு இல்லை! ராதன் பண்டிட் கணிப்பு

  • சென்னை: நடிகர் தனுஷ் அரசியல் கட்சியை தொடங்குவார் என சொல்லப்படும் நிலையில் அரசியலில் யார் யார் ஜொலிப்பார்கள், யார் தோற்பார்கள் என்பது குறித்து விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ராதன் பண்டிட் (ரத்தன் பண்டிட்) கணித்துள்ளார். அது போல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மீண்டும் முதல்வராகும் யோகம் இல்லை என்றும் ராதன் கணித்துள்ளார்.

    Advertisement

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர் என கூறப்படுகிறது. அது போல் திமுகவில் பெரியாரிய கொள்கையை கடைப்பிடிப்பவர்கள் இருந்தாலும் பல நிர்வாகிகள் ஜோதிடம், பூஜை, புனஸ்காரம் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளார்கள்.

    Advertisement

    அண்மையில் முதல்வர் விஜய்யின் ஜோதிடர் என ராதன் பண்டிட் என்பவர் பிரபலமடைந்தார். இவர் ஜெயலலிதாவுக்கும் ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார் என சொல்லப்படுகிறது.

    இவரது கணிப்புகள் பெரும்பாலும் பலிப்பதாக சொல்லப்படுகிறது. சட்டசபை தேர்தலில் விஜய் தோல்வியை சந்திப்பார் என திமுக, அதிமுக, பாஜக, நாதக உள்ளிட்ட கட்சிகள் கூறியிருந்த நிலையில் ரத்தன் பண்டிட்டோ வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை 9 மணிக்கெல்லாம் பூங்கொத்துடன் விஜய்யை நேரில் சந்திக்க ராதன் பண்டிட் சென்றிருந்தார்.

    அது போல் அதற்கு முந்தைய நாள் இரவு அவர் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், விஜய் வெற்றிபெறுவார் என்பது வாக்கு எண்ணிக்கையின் போது காலை 9, 10 மணிக்கெல்லாம் தெரிந்துவிடும் என்றார்.

    Advertisement

    அவர் சொன்னது போல காலை 9 மணி வாக்கில் தவெக முன்னிலை நிலவரம் தெரியவந்தது. இந்த நிலையில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராதன் பண்டிட் அரசியலில் யாரெல்லாம் சாதிப்பார்கள் என்பது குறித்த தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.

    அதில் முதல்வர் விஜய் எடுத்துள்ள பாதை வெற்றிப் பாதையாக அமைந்துவிடும் என தெரிவித்துள்ளார். அது போல் மு.க.ஸ்டாலினுக்கு இனி வெற்றி பெறும் யோகம் இல்லை. அவருடைய அரசியல் பயணம் ஓய்வை நோக்கி செல்லும்.

    விஜய் அரசியலுக்கு வரவில்லை என்றால் உதயநிதி முதல்வராகியிருப்பார். அண்ணாமலைக்கு முதல்வராகும் யோகம் இல்லை. நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதற்கான யோகம் இருக்கிறது.

    Advertisement

    அவர் அரசியலில் அடியெடுத்து வைக்கும் காலம் வரும் போது தமிழக அரசியலில் புதிய போட்டி உருவாகும். ஆனால் தனுஷின் வருகை தமிழக முதல்வர் விஜய்யை பாதிக்காது.

    அண்மையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த தனது பிறந்தநாள் விழாவில் பேசிய தனுஷ், சும்மா வந்தோம், என்னுடன் புகைப்படம் எடுத்தோம், என இருக்க கூடாது. உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள், நலத்திட்டங்களை வழங்குங்கள் என பேசியிருந்தார். அது போல் சூர்யா நற்பணி மன்றமும் அவரது பிறந்தநாளுக்கு ரத்த தான முகாம் உள்ளிட்டவைகளை நடத்துகிறது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Astrologer Rathan Pandit (ரத்தன் பண்டிட்) says that MK Stalin cannot become CM hereafter. Its time to retire from politics.