ரேஷன் கார்டுதாரர் விபரங்கள் திருடப்பட வாய்ப்பு.. தமிழகத்தை உடனே அலர்ட் செய்த மத்திய அரசு

  • சென்னை: தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்களின் அத்தியாவசியத் தேவையாக இருக்கும் ரேஷன் கார்டு தரவுகள் அனைத்தும் மிக விரைவில் திருடப்படலாம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்த திடீர் எச்சரிக்கையையடுத்து, தமிழக உணவு வழங்கல் துறையினரும் அலர்ட் ஆகியுள்ளனர். என்ன நடந்தது?

    Advertisement

    தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புபவர்கள் அனைவரும் அரசின் அதிகாரப்பூர்வ பொது விநியோக திட்ட வெப்சைட்டின் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது.

    Advertisement

    ரேஷன் அட்டைதாரர்கள்

    அதுமட்டுமல்லாமல், கார்டுகளில் முகவரி மாற்றம் செய்வது, குடும்ப உறுப்பினர் பெயர்களைச் சேர்ப்பது அல்லது நீக்குவது, செல்போன் எண்களை மாற்றுவது மற்றும் தொலைந்துபோன கார்டுகளுக்கு பதிலாக நகல் கார்டுகளை பெறுவது என அனைத்து சேவைகளுமே இப்போது ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகின்றன. அதனால்தான்ட பொது விநியோகத் துறையின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு இயங்கி வருகிறது.

    இப்படிப்பட்ட சூழலில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கணினி அவசர கால பதிலளிப்பு குழுவிலிருந்து தமிழக அரசுக்கு ஒரு எச்சரிக்கை தகவல் வந்துள்ளது.

    Advertisement

    சைபர் கிராமிங்

    அதில், தமிழக ரேஷன் கார்டுதாரர்களின் மிக முக்கியமான விவரங்கள் மற்றும் தரவுகள் சைபர் கிராமிங் எனப்படும் இணையத் திருடர்களின் கைக்கு செல்ல வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... எனவே, இணையவழியில் வரவிருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை, உடனுக்குடன் தடுத்து நிறுத்தும்படியும், பொது விநியோகத் திட்ட இணையதளத்தின் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்துமாறும் அந்த எச்சரிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதையடுத்து, தமிழகத்தின் பொது விநியோகத் திட்ட இணையதளத்தில் அதிநவீன பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டிய கட்டாயமும் அவசியமும் இப்போது அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

    அந்தியோதயா கார்டுகள்

    தமிழகத்தில் முன்னுரிமை கார்டுகள், அந்தியோதயா கார்டுகள், முன்னுரிமையற்ற அரிசி மற்றும் சர்க்கரை கார்டுகள் மற்றும் எந்தப் பொருளும் வாங்காத கார்டுகள் என்று பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 2 கோடியே 28 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.. இந்த கார்டுகளின் கீழ் மட்டும் கிட்டத்தட்ட 7 கோடியே 1 லட்சம் குடிமக்கள் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

    Advertisement

    இவ்வளவு பெரிய அளவிலான மக்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பது பலத்த சந்தேகத்தையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது. அரசின் இந்த இணையதளங்கள் சைபர் திருடர்களின் குறிவைப்பில் சிக்கியுள்ளதா அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் மிகப்பெரிய தொழில்நுட்பக் கோளாறு உள்ளதா என்றும் தெரியவில்லை..

    எனினும், கோடிக்கணக்கான மக்களின் தகவல்களை பாதுகாப்பதில் தமிழக உணவு வழங்கல் துறை, அதிரடியாக களமிறங்கியிருப்பதாக தெரிகிறது...!!

    English Summary

    Ration Card Details at Risk of Theft.. Central Government Alerts Tamil Nadu Over Cyber Threat