ரேஷன் கார்டுதாரர்களே.. இந்த மாதமே 2 மாத பொருட்கள் கிடைக்குமா? தமிழக அரசின் பிளான் என்ன?

  • சென்னை: ரேஷன் கடைகள் மூலம் தமிழக மக்களுக்கு ஒரு சூப்பர் சர்ப்ரைஸ் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. ஏற்கனவே அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், தமிழக அரசு எடுக்கப்போகும் அடுத்தடுத்த முடிவுகள் என்ன என்பதில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆர்வம் பெருகி வருகிறது..!!

    Advertisement

    தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி கார்டுதாரர்களுக்கு இலவச அரிசியும், சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், தீபாவளியை முன்னிட்டு இரண்டு மாதங்களுக்கான ரேஷன் பொருட்களை முன்கூட்டியே வழங்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    அரிசி கார்டுதாரர்கள்

    அதாவது, நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான ரேஷன் பொருட்களை இந்த மாத இறுதியில் இருந்தே வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.. இதனால், தீபாவளி நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஏற்படும் சிரமம் குறையுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

    அதேபோல, தீபாவளி பண்டிகையின்போது ரேஷன் கடைகள் வாயிலாக இலவச மளிகை தொகுப்பு வழங்கவும் திட்டமிடப்படுவதாக கடந்த ஒரு மாத காலமாகவே தகவல்கள் கசிந்தபடியே உள்ளது.. இதற்காக எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது குறித்து நிதித் துறையிடம் முதல்வர் விஜய் விபரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    ஆனால், இலவச மளிகை தொகுப்பு வழங்குவது குறித்தும், அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படவில்லை. அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே இந்தத் திட்டத்தின் முழு விபரங்களும் தெரியவரும்.

    அத்தியாசிய பொருட்கள் விலை

    ஆனால், தமிழகத்தில் மட்டுமல்லாமல், பல மாநிலங்களிலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மக்களைப் பாதித்து வருகிறது. தென்மேற்கு பருவமழை குறைந்ததால் பல மாநிலங்களில் வேளாண் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் உணவு தானியங்கள் உற்பத்தி குறைந்து, அரிசி, பருப்பு வகைகள், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.20-க்கும் மேல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    ஏற்கனவே குடும்ப செலவுகளை சமாளிக்க மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், இந்த விலை உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன.

    ரேஷன் அரிசிக்கு எகிறிய மவுசு

    இதுகுறித்து உணவுத் துறை அதிகாரி ஒருவர் சொல்லும்போது, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. அடுத்த மாதம் தீபாவளி கொண்டாடப்பட உள்ளதால், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான ரேஷன் பொருட்களை இந்த மாத இறுதியிலேயே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்வருடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அதாவது தமிழகத்தில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால், இரு மாதங்களுக்கான ரேஷன் பொருட்களை, முன்கூட்டியே வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    இதில் இன்னொரு சுவாரஸ்யமான மாற்றமும் நடந்துள்ளது. இதுவரை ரேஷன் கடைகளில் அரிசி வாங்காமல் இருந்த சில குடும்ப அட்டைதாரர்கள், இப்போது அரிசி விலை உயர்ந்துள்ளதால் ரேஷன் அரிசியை வாங்க ஆரம்பித்து விட்டார்களாம்.

    2 மாதங்களுக்கான ரேஷன்

    தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. மேலும், 2 கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் பாமாயில் ஆகியவை மானிய விலையில் வழங்கப்படுகின்றன.

    Advertisement

    வெளிச்சந்தையில் அரிசி உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரித்து வருவதால், ரேஷன் கடைகளில் கிடைக்கும் பொருட்களின் முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது. இதனால் ரேஷன் அரிசிக்கு முன்பைவிட மவுசு கூடியுள்ளது.

    இப்போது முக்கியமான சந்தேகம் என்னவென்றால், 2 மாத ரேஷன் பொருட்களை முன்கூட்டியே வழங்கும் திட்டம் எப்போது உறுதியாகும்? தீபாவளிக்காக இலவச மளிகை தொகுப்பும் கிடைக்குமா? இதற்கான தெளிவான பதில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் இறுதி அறிவிப்புக்குப் பிறகுதான் தெரியவரும்..!!

    English Summary

    Ration Card Holders.. 2 Months of Ration Items in October? What Is Tamil Nadu Government Planning?