ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு.. நவம்பர் 4, 5-ல் வீடு தேடி பொருட்கள்.. யாருக்கெல்லாம் குட் நியூஸ்?

  • சென்னை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு சலுகைகளையும், உதவிகளையும் வழங்கி வருகிறது... குறிப்பாக முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடை தொடர்பாக 2 முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!

    Advertisement

    தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    Advertisement

    வீடு தேடி ரேஷன் பொருட்கள்

    அதன்படி, இந்த நவம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் நாளை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சென்னை முழுவதும் உள்ள 19 மண்டலங்களில் விநியோகம் செய்யப்படவுள்ளன. இதற்காக 1,346 நியாயவிலைக் கடைகள் இணைக்கப்பட்டுள்ளன. 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே கடை விற்பனையாளர்கள் நேரில் சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்குவார்கள் என்று தமிழக கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    ரேஷன் அட்டை வைத்திருப்போர்

    அதேபோல, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தல், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட சேவைகளையும் பொதுமக்கள் தொடர்ந்து பெறலாம். மேலும், ரேஷன் அட்டைதாரர்களின் குறைகளைத் தீர்க்கவும், அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் ஒவ்வொரு மாதமும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

    Advertisement

    வழக்கமான அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களும் நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்கும் திட்டம் உதவியாக இருக்கும்.

    தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை

    இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடை பணியாளர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 9-ம் தேதி ரேஷன் கடை பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஏனென்றால், கடந்த அக்டோபர் மாதம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகைகளையொட்டி தொடர் விடுமுறை வந்ததால், ரேஷன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக அக்டோபர் 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    Advertisement

    நவம்பர் 9 விடுமுறை

    இதற்கு ஈடாக நவம்பர் 21-ம் தேதி விடுமுறை நாளாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 9-ம் தேதியையும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

    இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, ஏற்கெனவே விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த நவம்பர் 21-ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 9-ம் தேதியை விடுமுறை நாளாக மாற்றி அறிவித்துள்ளது.

    இதன்படி, நவம்பர் 9-ம் தேதி ரேஷன் கடை பணியாளர்களுக்கு விடுமுறை. அதே நேரத்தில் நவம்பர் 21-ம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும். இதற்கான சுற்றறிக்கையை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் வெளியிட்டுள்ளார்...!!!

    English Summary

    Ration Card Holders Alert: Essential Items To Be Delivered At Doorstep On November 4, 5 - Who Is Eligible?