ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி

  • சென்னை: தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டம் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் அதிரடி உறுதி அளித்துள்ளார். இதையடுத்து தென்காசி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை மாவட்ட ஆட்சித்தலைவர் தற்போது பிறப்பித்துள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்கள் இலவசமாகவும், பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்டவை மிகவும் மலிவான விலையிலும் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன.

    Advertisement

    ரேஷன் பொருட்கள்

    பொதுவாக, குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினர்கள் நேரடியாக ரேஷன் கடைகளுக்குச் சென்று, தங்களின் பயோமெட்ரிக் கைரேகையை பதிவு செய்த பிறகே இந்த பொருட்களைப் பெற முடியும் என்பது நடைமுறை.

    ஆனால், உடல்நலக் குறைவு, முதுமை அல்லது மாற்றுத்திறன் காரணமாகப் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றோ, நீண்ட வரிசையில் நின்றோ பொருட்களை வாங்க முடியாத சூழலில் லட்சக்கணக்கான முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் தவித்து வந்தனர்.

    வீடு தேடி ரேஷன்

    இவர்களின் துயரத்தைத் துடைப்பதற்காகவே, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நோக்கில் "முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம்" அறிமுகப்படுத்தப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெற்றிகரமாகச் செயல்பட துவங்கியது.

    Advertisement

    சமீபத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முந்தைய அரசின் சில முக்கிய நலத்திட்டங்கள் தொடர்ந்து நீடிக்குமா அல்லது முடக்கப்படுமா என்ற மிகப்பெரிய விவாதமும், சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது.

    அமைச்சர் வெங்கடரமணன்

    முக்கியமாக எளிய மக்களின் அன்றாட உணவோடு தொடர்புடைய இந்த தாயுமானவர் திட்டத்தின் எதிர்காலம் என்ன என்ற அச்சம் பயனாளிகள் மத்தியில் நிலவியது. இந்தச் சூழலில், முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் மாபெரும் நிம்மதியளிக்கும் வகையில், உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் கடந்த வாரம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

    எக்காரணத்தைக் கொண்டும் இத்திட்டம் நிறுத்தப்படாது என்றும், தமிழக மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் எந்தவித சிரமமும் இன்றி எளிதாகக் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் முதன்மையான நோக்கம் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    Advertisement

    அதுமட்டுமல்ல இந்த உன்னதமான திட்டம் எவ்வித இடையூறும், தொய்வும் இல்லாமல் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய, தேவையான அனைத்து நிதி வசதிகளையும் அரசே முழுமையாகச் செய்து தரும் என்றும், பயனாளிகளுக்குத் தரமான சேவையை வழங்க அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதி அளித்தார்.

    தென்காசி கலெக்டர் அதிரடி

    அமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது மாவட்ட வாரியாக இத்திட்டத்தை தீவிரப்படுத்துவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

    அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் இத்திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்த மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் இப்போது வெளியிட்டுள்ளார். அதன்படி, தென்காசி மாவட்டத்தில் உள்ள தகுதியான பயனாளிகளுக்கு, வரும் ஜூன் மாதம் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் அவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று குடிமைப்பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இந்த குறிப்பிட்ட நாட்களில், 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கே, சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் நேரடியாகச் சென்று அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் எவ்வித தாமதமும் இல்லாமல் வழங்க உள்ளனர்.

    முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்

    ரேஷன் கடைக்கு செல்ல முடியாமல் தவித்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும், ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தங்கள் இல்லங்களிலேயே பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் இந்தச் சிறப்பு வாய்ப்பினைப் பயன்படுத்திப் பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    Advertisement

    அரசின் இந்தத் தொடர் நடவடிக்கையும், மாவட்ட நிர்வாகத்தின் துரிதச் செயல்பாடும் அப்பகுதி மக்களிடையே, குறிப்பாக முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் நெகிழ்ச்சியையும், பெரும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Ration Card Holders Get Happy News: Surprise Doorstep Benefit Coming on June 2 and 3 as District Collector Announces Major Move