இனி ரேஷன் பொருட்கள் வாங்க ரேஷன் கார்டு தேவையில்லை.. அமைச்சர் வெங்கடரமணன் அறிவிப்பு

  • சென்னை: ''தமிழ்நாட்டில் எந்த கடைகளில் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம். நியாய விலை அட்டை கையில் இல்லாவிட்டாலும் அட்டையின் 'சாப்ட் காப்பி'(ஜெராக்ஸ்) மொபைல் போனில்இருந்தால் கூட பொருட்களை வாங்கி கொள்ளலாம்''என்று தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் அமைச்சர் பி வெங்கடரமணன் கூறினார்.

    Advertisement

    தமிழக சட்டசபையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு துறைகளின் மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. இதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மீதான மானிய கோரிக்கையில் அமைச்சர் பி வெங்கடரமணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    Advertisement

    நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வாங்கும் மக்கள் தங்களுக்குரிய கடைகளில் மட்டம் தான் பெருட்கள் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தமிழ்நாட்டில் எந்த கடைகளில் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம். நியாய விலை அட்டை கையில் இல்லாவிட்டாலும் அட்டையின் 'சாப்ட் காப்பி' மொபைல் போனில்இருந்தால் கூட பொருட்களை வாங்கி கொள்ளலாம்''என்று கூறினார்.

    English Summary

    "Ration supplies can be purchased from any shop in Tamil Nadu. Even without the physical ration card, one can buy the goods by simply having a soft copy of the card on a mobile phone," said P. Venkataramanan, Tamil Nadu's Minister for Food and Consumer Protection.