அரசியலுக்கு வருகிறீர்களா? அவரே சொன்ன சிம்பிள் பதில்.. திடீரென ரசிகரின் திருமணத்திற்கு வந்த ரவி மோகன்

  • கள்ளக்குறிச்சி: தமிழ்நாட்டில் அரசியலில் ஈடுபட ஆர்வம் இருப்பவர்கள் தாராளமாக வரலாம் என்று நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார். என்னை பொறுத்தவரை அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்று இல்லை என்று கூறிய ரவி மோகன், செப்டம்பர் 5ஆம் தேதி ரசிகர்களை சந்திக்க ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் தமிழக முதல்வர் பதவியை எட்டியுள்ளார். விஜய்யை தொடர்ந்து பல்வேறு நடிகர்களும் அரசியலுக்கு வரும் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். திரைத்துறையைச் சார்ந்தவர்கள் பலரும் தவெகவிலும் ஐக்கியமாகி வருகின்றனர். அதேபோல் விஜய்யை தொடர்ந்து நடிகர் தனுஷ் அரசியல் வரும் ஆர்வத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    Advertisement

    அவரின் ரசிகர் மன்றத்தில் தொகுதி வாரியாக உறுப்பினர்கள் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நற்பணி வேலைகளிலும் ரசிகர்கள் ஈடுபட தனுஷ் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் தனது ரசிகர் ஒருவரின் திருமணத்திற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் வந்தார். இதனால் ரவி மோகனும் ரசிகர் மன்ற விவகாரத்தை கையில் எடுக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்தது.

    இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.. அது எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம்.. அரசியலுக்கு வந்தும் செய்யலாம்.. அரசியலுக்கு வராமலும் செய்யலாம். அரசியலில் ஆர்வம் இருப்பவர்கள் அதனை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக வரலாம். அதில் எந்த தவறும் இல்லை.

    Advertisement

    நல்லது செய்வதை எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம். அதேபோல் மாணவர்கள் போராட்டம் வெல்ல வேண்டும் என்பதே ஆசை. என்னுடைய அடுத்த படம் கராத்தே பாபு.. கூடிய சீக்கிரம் ஒரு அறிவிப்பு வரும்.. ரிலீஸ்க்கு காத்திருக்கிறது. ரொம்ப நல்லா வந்திருக்கிறது. எனக்கு நல்ல திருப்புமுனையாக இருக்கும் என்று நம்புகிறேன். அதன்பின் என்னுடைய தயாரிப்பில் ப்ரோ கிளப் படம் வரவிருக்கிறது.

    அதேபோல் நடிகர் யோகிபாபுவை வைத்து நான் ஆர்டினரி மேன் என்ற ஒரு படத்தை இயக்கி வருகிறேன். நல்லபடியாக முடியும் தருவாயில் இருக்கிறது. ரசிகரின் திருமணத்திற்காக வந்திருக்கிறேன். எனக்கு வரவேற்பு கொடுத்ததில் மகிழ்ச்சி.. என்னை பார்க்க வந்தவர்களும் அன்புடன் பேசினார்கள். விரைவில் ரசிகர்களை சந்திக்க ஒரு நிகழ்ச்சி நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளோம்.

    Advertisement

    நிச்சயமாக வரும் நாட்களிலும் ரசிகர்களின் விழாவில் பங்கேற்பேன். ஜெயம் படத்தில் இருந்தே எனக்கு ரசிகர் மன்றம் உள்ளது. ரசிகர்களுடன் ஜாலியாக பழக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது சில காரணங்களால் முடியாமல் போனது. இனி ரசிகர்களை தொடர்ந்து சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Ravi Mohan: Actor Ravi Mohan Announces Fan Meet for September 5, Shares Views on Politics entry