ரவி மோகன் பசங்க ஸ்கூல் ஃபீஸ் மட்டும் ரூ 86 லட்சமாம்! ரூ 40 லட்சத்திற்கு பிரேக் அப் கொடுத்த சுஜாதா

  • சென்னை: 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்டது ஏன் என்பது குறித்து ஆர்த்தியின் தாயும், ரவி மோகனின் மாமியாருமான சுஜாதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

    Advertisement

    ரவி மோகன்- ஆர்த்தி விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் அண்மையில் கிடைத்த ஒரு இடைக்கால உத்தரவு குறித்து ரவி மோகன் மாமியார் சுஜாதா விளக்கமளித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியிருப்பதாவது: என் மகள் ஆர்த்தி 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டதாகவும் அதை மறுத்த கோர்ட் ரூ 3 லட்சம் மட்டுமே தர உத்தரவிட்டதாகவும் தவறான தகவல்கள் ஊடகங்களில் வருகின்றன.

    அது தவறு! ஊடகங்களுக்கு உண்மை தெரியாததால் அப்படி ஒரு செய்தியை போட்டுவிட்டீர்கள். அதற்கு நான் விளக்கம் கொடுக்கிறேன். இந்த தீர்ப்பை அளித்த நீதிபதிக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

    சுமார் 10 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் எங்களுக்கு எத்தனை விஷயங்கள் சாதகமாக வந்தது என உங்கள் யாருக்கும் தெரியாது. நாங்கள் ஒட்டுமொத்தமாக ரூ 40 லட்சம் மாதாமாதம் கேட்கவில்லை. இது பெரிய தொகை, யாராலும் தர முடியாது என்பது எங்களுக்கு தெரியும்.

    Advertisement

    ஆரவ், ஆர்யன் ஆகிய இருவரும் அமெரிக்கன் பள்ளியில் படிக்கிறார்கள். இவர்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் மட்டும் ஆண்டுக்கு ரூ 86 லட்சம் ஆகும். இந்த பள்ளியில் சேர்த்துவிட்டது நாங்கள் கிடையாது, ரவிதான்.

    தற்போது அந்த பள்ளிக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் குழந்தைகள் செல்லும் டான்ஸ், கராத்தே என Extra Curricular வகுப்புகளுக்கும் ரவி பணம் செலுத்த கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.

    மேலும் ஆர்த்திக்கு 3 லட்சம், ரெண்டு குழந்தைகளுக்கும் தலா 1 லட்சம் என பராமரிப்புத் தொகையாக மாதம் ரூ 5 லட்சம் கொடுக்க வேண்டும் என ரவிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    கடந்த 2 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு அவர் சாப்பாட்டுக்கு கூட காசு கொடுக்கவில்லை. "ஏன் உங்களுக்கு சாப்பாட்டுக்குக் கூட வழியில்லையா" என நீங்கள் (நிருபர்கள்) கேட்கலாம். குழந்தைகளை பராமரிப்பது பெற்றோரின் கடமை. இவர் எங்கள் மீது கடனை வைத்துவிட்டு சென்றுவிட்டார். இஎம்ஐ கட்டாததால் வீடு ஜப்திக்கு வந்துவிட்டது.

    இவை எல்லாவற்றுக்கும் சேர்த்துதான் ரூ 40 லட்சம் வருதே தவிர, ஆர்த்தி தனக்கென இத்தனை லட்சத்தை கேட்கவில்லை. குழந்தைகளை கடந்த 2 ஆண்டுகளாக சந்திக்கவே இல்லை என ஆர்த்தி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தாங்க.

    அப்படியிருக்கும் போது நாங்கள் ஏன் குழந்தைகளை பார்க்கவிடாமல் தடுக்க போகிறோம். இவர் குழந்தைகளை ஹீலர் இருக்கும் இடத்திற்கு வரச்சொன்னால் எப்படி செல்வார்கள்? அதை கூட அவர்களாகவே போகவில்லை என்றார்களே தவிர நாங்கள் யாரும் சொல்லவில்லை.

    Advertisement

    எந்த ஒரு தாயும் தனது மகளை திருமண வாழ்க்கையில் இருந்து பிரித்து தன்னுடன் வைத்துக் கொள்ள விரும்பமாட்டார்! நான் எதற்காக ரவியிடம் இருந்து என் மகளை பிரிக்க வேண்டும்?

    நான் என் மகளை திருட்டுத்தனமாகவா திருமணம் செய்து கொடுத்தேன், 3 நாட்கள் திருமண விழா நடத்தினேன். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவர்களது திருமணத்திற்கு வந்து சென்றுள்ளனர். என் மகளை என்னுடனே வைத்துக் கொள்ள அவள் (ஆர்த்தி) என்ன சம்பாதிக்கிறாளா? அந்த பணத்தை நான் எடுத்துக் கொள்ள! யாருடைய சொத்தையும் நான் அபகரிக்கவில்லை. எங்களுக்கு அது தேவையும் இல்லை!

    Advertisement

    2007-இல் "வீராப்பு" படம் மூலம் என்னை தயாரிப்பாளர் ஆக்கியது என் தம்பி சுந்தர் சி! ரவி மோகன் இல்லை. இவ்வாறு சுஜாதா நிறைய பதிலடிகளை கொடுத்துள்ளார். மேலும் வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் என் மகள், பேர பிள்ளைகளை ரவி சந்திக்க வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது என்றார்.

    English Summary

    Ravi Mohan mother in law explains why Rs 40 lakhs alimony for Aarti. The amount is not only for Aarti.