ரத்த வாந்தி, பிளாக் மேஜிக்கா! ரவி மோகனால் எப்படி உயிருடன் இருக்க முடியும்! மாமியார் சுஜாதா கேள்வி

  • சென்னை: ஆர்த்தியின் குடும்பத்தினர் தனக்கு பிளாக் மேஜிக் செய்துவிட்டதாக ரவிமோகன் குற்றச்சாட்டை மாமியார் சுஜாதா மறுத்துள்ளார். மேலும் 15 ஆண்டுகளாக ரத்த வாந்தி எடுத்துட்டு யாராவது உயிருடன் இருக்க முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    ரவிமோகன் - ஆர்த்தி விவகாரத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மனதார வரவேற்பதாக ஆர்த்தியின் தாயும் ரவிமோகனின் மாமியாருமான சுஜாதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் அண்ணா சாலை வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து கூறியிருப்பதாவது: எனது மூத்த பேரன் ஆரவ்வுக்கு சினிமாவில் நடிக்கவே பிடித்திருப்பதாக சொன்னார். அதனால் அவர் வெளிநாட்டில் ஒரு படிப்பு படிக்க கேட்டார். எனது கணவரும் அதற்கான பணத்தை செலுத்தி படிப்பதற்கு ஏற்பாடுகளை செய்தார்.

    ஆனால் பேரனின் பாஸ்போர்ட் 4 மாதங்களில் முடிவடைவதை பார்த்தோம். மைனர் குழந்தைகள் வெளிநாடு சென்றால் தாய், தந்தை இருவரும் சேர்ந்து பாஸ்போர்ட் புதுப்பிப்புக்கு கையெழுத்திட வேண்டும்.

    இதற்காக அந்த குழந்தை ரவிக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார். ரவியும் வெளியூரில் இருப்பதால் நிச்சயம் வந்து கையெழுத்திடுகிறேன் என்றாராம். பிறகு ரவிமோகன் சென்னைக்கு வந்ததும் பேரன் பாஸ்போர்ட் அலுவலகத்தில் 6 மணி நேரம் காத்திருந்தார்.

    Advertisement

    ஆனால் ரவி வரவே இல்லை. எங்கே இருக்கிறீர்கள் என பேரன் கேட்டதற்கு இதோ வந்துக் கொண்டிருக்கிறேன் என சொன்னார். அடுத்த 2 நிமிடத்தில் ஒரு பெரிய மெசேஜ் எனது பேரனுக்கு அவரது மொபைலில் இருந்து வருகிறது. அதில் "நான் என்ன உங்களுக்கு ஏடிஎம் மெஷினா? என்னை எல்லாரும் சீண்டி பார்க்குறீங்களா? " என்றெல்லாம் அதில் இருந்தது.

    16 வயது குழந்தைக்கு இப்படி ஒரு மெசேஜை அனுப்பலாமா, இது ரவி அனுப்பியதில்லை, அவருடன் இருப்பவர்கள் அனுப்பியது. கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் குழந்தைகளை பார்க்க விடவில்லை என ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

    Advertisement

    குழந்தைகளை பார்க்க நாங்கள் மறுத்ததே இல்லை. ஆனால் ஒன்று பொது இடத்தில் குழந்தைகளை பார்க்க வேண்டும், இல்லாவிட்டால் அவரது தாய் தந்தை அதாவது எங்கள் சம்பந்தி இருக்கும் இடத்தில் பார்க்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு ஹீலர் இருக்கும் வீட்டிற்கு வரச் சொன்னால் குழந்தைகள் எப்படி செல்வார்கள்?

    திருமணமானதிலிருந்தே ரவி மோகனுக்கு நாங்கள் மருந்து வைத்து மாந்த்ரீகம் (பிளாக் மேஜிக்) செய்ததால் தினமும் ரத்த வாந்தி எடுப்பதாக சொல்கிறார்! 15 ஆண்டுகளாக ரத்த வாந்தி எடுத்துவிட்டு யாராவது உயிருடன் இருக்க முடியுமா என செய்தியாளர்களிடம் சுஜாதா கேள்வி எழுப்பினார். நிறைய குற்றச்சாட்டுகளுக்கு சுஜாதா விஜயகுமார் பதிலளித்துள்ளார்.

    Advertisement

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவிமோகன் தநது மனைவி ஆர்த்தியை கடந்த 2024 ஆம் ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தார். ஆனால் இதில் ஆர்த்திக்கு விருப்பமில்லை. தன்னிடம் எதையும் சொல்லாமல் நேராக அறிக்கைவிட்டதாக ஆர்த்தி குற்றம்சாட்டினார்.

    மேலும் அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்திருந்தார். தனக்காக இல்லாவிட்டாலும் தனது மகன்களுக்காக அவர் மனம் திருந்தி வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் நெருக்கம் காட்டி வருவதே விவாகரத்து முடிவுக்கு காரணம் என சொல்லப்பட்டது.

    இருவரும் ஒரே மாதிரியான மேட்சிங் உடைகளை அணிந்து கொண்டு பல்வேறு பிரபலங்களில் திருமணத்திற்கு சென்றனர். இருவரும் சேர்ந்து ஸ்டூடியோவை தொடங்கினர். கெனிஷா மீது பல்வேறு விமர்சனங்கள் வந்த நிலையில் ரவிமோகனை விட்டு விலகுவதாக கெனிஷா தெரிவித்தார்.

    Advertisement

    இந்த மன வருத்தத்தில் ரவி மோகன் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து , ஆர்த்தி, சுஜாதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும் இட்லி நடிகை என குறிப்பிட்டு அவரையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

    இந்த நிலையில்தான் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இவர்களின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் அண்மையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    English Summary

    Producer Sujatha Vijayakumar asks that how Ravi mohan can alive if he does blood vomit for 15 years?