இலவச கோச்சிங் சென்டர்.. திறப்பு விழாவின் போது ரோடு ஷோ, நிர்வாகிகள் சந்திப்பு! சரியான ரூட்டில் தனுஷ்

  • சென்னை: நடிகர் தனுஷ் நற்பணி இயக்கம் சார்பாக 234 தொகுதிகளிலும் ஏசி கோச்சிங் சென்டர் தொடங்கப்பட உள்ளது உறுதியாகி உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அத்தனை தொகுதிகளிலும் கோச்சிங் சென்டர் தொடங்கப்படும் என்று உறுதி செய்துள்ள தனுஷ், அதனை தொடங்கி வைப்பதன் மூலமாக தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் நடிகர் தனுஷ் பேசுகையில், 234 தொகுதிகளிலும் நாங்கள் உடனடியாக இலவச ஏசி கோச்சிங் சென்டர் தொடங்க முடியுமா என்று தெரியவில்லை. தற்போதைக்கு இன்னும் 10 -15 நாட்களில் சென்னையில் 3 இடங்களிலும், கன்னியாகுமரியில் ஒரு இடத்திலும் தொடங்குகிறோம்.

    Advertisement

    இதனை அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழ்நாடு முழுக்க கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். 3 ஆண்டுகளில் அத்தனை தொகுதிகளிலும் கொண்டு வர முடியும். அதேபோல் என்னை இவர்கள் இயக்குகிறார்கள், அவர்கள் இயக்குகிறார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். என்னை இயக்குவது இறைவன்.. என் பின்னால் இருப்பது ரசிகர்கள்.. மக்கள் என் பக்கம் என்று கூறியுள்ளார்.

    இதன் மூலமாக தனுஷ் தனது அரசியல் வருகைக்கான ஆரம்பப் புள்ளியை வைத்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. அடுத்தக் கட்டமாக தனுஷ் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே தனுஷ் 56வது ப்டத்தின் பூஜையை சிவகங்கையில் பிரம்மாண்டமாக நடத்தி பலரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

    Advertisement
    வருத்தம் தெரிவித்த நடிகர் தனுஷ்.. இது யாருடைய தவறு? 'ஓம்' இசை வெளியீட்டு விழாவில் நடந்த சோகம்

    தற்போது ஏசி கோச்சிங் சென்டர் தொகுதி தோறும் அமைப்பதன் மூலமாக தனுஷ் ஒவ்வொரு தொகுதிக்கும் பயணிக்க முடியும். இதன் தொடக்க விழாவின் போது தனுஷ் ரோடு ஷோ மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டங்களை எளிதாக நடத்த முடியும். அதேபோல் எதிர்கால வாக்காளர்களான மாணவர்களையும் தனுஷ் தயார் செய்ய முடியும்.

    அதுமட்டுமல்லாமல் தவெக பாணியில் எதிர்காலத்தில் கோச்சிங் சென்டர் மூலமாக படித்து முன்னேறியவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு விருது விழாவையும் நடத்தும் திட்டம் இருப்பதாக தனுஷ் ரசிகர்கள் பேச தொடங்கி உள்ளனர். அதேபோல் இசை வெளியீட்டு விழாக்களை இனி மாவட்ட வாரியாகவும் தனுஷ் நடத்த முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தனுஷ் நற்பணி இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை அதிகரிக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.

    English Summary

    Reason Behind Actor Dhanush Plans AC Coaching Centres in 234 Constituencies Over Next 3 Years