மோடியை மட்டும் வரவேற்க வந்திருக்காரே.. அமித்ஷா வந்த போது எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளவே இல்லையே!

  • சென்னை: பூந்தமல்லி - வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மோடியை நேரில் சென்று எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகஸ்ட் மாதம் சென்னை வந்த போது எடப்பாடி பழனிசாமி கண்டு கொள்ளவே இல்லை. ஆனால் திடீரென மோடியை வரவேற்க மட்டும் எடப்பாடி பழனிசாமி ஆர்வமாக வந்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் தவெக ஆட்சியை பிடித்துள்ள சூழலில், திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருக்கிறது. இதனால் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலிலும் கூட அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் அதிமுகவினர் பலரும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை நோக்கி கேள்வி கேட்க தொடங்கி உள்ளனர்.

    Advertisement

    எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் விரைவில் அதிருப்தி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை வந்துள்ள பிரதமர் மோடியை நேரில் சென்று வரவேற்றுள்ளார். முதல்வர் விஜய், ஆளுநர் அர்லேகர், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மோடியை வரவேற்றுள்ளனர்.

    ஆகஸ்ட் மாதத்தில் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். அப்போது அமித்ஷாவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்த நிலையில், எடப்பாடி பழனிசாமி நேரில் வரவில்லை. குறைந்தபட்சம் அமித்ஷாவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளவில்லை.

    Advertisement
    இது புதுசா இருக்குங்க.. சென்னையில் பிரதமர் மோடி! வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட விவசாயிகள்! என்னாச்சு?

    தற்போது இடைத்தேர்தல் தோல்விக்கு பின் திடீரென பிரதமர் மோடியை சந்தித்து வரவேற்பு அளித்துள்ளார். இடைத்தேர்தலின் போது பாமக மற்றும் பாஜக நிர்வாகிகள் அதிமுக பக்கமே நெருங்கவில்லை. இதனால் என்டிஏ உடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி உறுதி செய்ய விரும்புவதாக தெரிகிறது. லோக்சபா தேர்தலில் பாஜக ஆதரவு வாக்குகள் மூலமாக சில தொகுதிகளில் வென்றால், அதிமுகவை மீட்டெடுக்க முடியும்.

    அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கு அதிமுக தயாராகவும் முடியும். இதனிடையே எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோரை அமைதிபடுத்தவும் பாஜகவின் உதவியை எடப்பாடி பழனிசாமி நாட முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் அதிமுக எம்எல்ஏ-க்கள் யாரும் தவெக பக்கம் செல்லாமல் இருக்கவும், பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி நெருங்குகிறார் என்று கணிப்புகள் வெளியாகியுள்ளன.

    English Summary

    Reason behind AIADMK General Secretary Edappadi Palaniswami Personally Receives PM Modi in Chennai