சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம்

  • சென்னை: சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் இருந்த போலீசாருக்கு தண்ணீர் காட்டி விட்டு கைதி தப்பி ஓடிய சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை ஓஎம்ஆர் சாலை ஓக்கியம் துரைப்பாக்கம், எழில் நகர் பகுதியை சேர்ந்த விஷால் (எ) பப்லூ (19) என்ற இளைஞரை இன்று காலை கைது செய்து, நீலாங்கரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அவர் காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடிவிட்டார்.

    Advertisement

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம், பிள்ளையார் கோயில் தெருவில் நாகர்கோயிலை சேர்ந்த பிசிலின் ஆன் ஆல்ட்ரின் (38) என்பவர் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த மே மாதம் 28 ம் தேதி இரவு வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று நேற்று அதிகாலை சுமார் 6 மணியளவில் வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    Advertisement

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்து சென்ற ரூபாய் 30 ஆயிரம் ரொக்கப் பணம் காணாமல் போனது தெரியவந்தது. பின்னர் இச்சம்பவம் குறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நீலாங்கரை ஆய்வாளர் கொடிராஜ் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    சென்னை ஓஎம்ஆர் சாலை ஓக்கியம் துரைப்பாக்கம், எழில் நகர் பகுதியை சேர்ந்த விஷால் (எ) பப்லூ (19) என்ற இளைஞரை இன்று காலை கைது செய்து, நீலாங்கரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். நீலாங்கரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த விஷால் என்ற இளைஞர் காவல் நிலையத்தின் பின்புறம் தப்பி ஓடியுள்ளார். விசாரணை கைதி காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தப்பி ஓடிய விசாரணை கைதியை போலீசார் பிடித்து உள்ளதாக காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

    Advertisement


    திண்டுக்கல் போலீஸ்

    திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா சாமிநாதபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்து நடந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் உள்பட இரு தரப்பினரையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்பட போலீசார் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் காணிப்பாளர் பிரதீப் உத்தரவின்பேரில், டிஎஸ்பி தனஞ்செயன் விசாரணை நடத்தினார். விசாரணையில் விபத்து வழக்கில் லஞ்சம் பெற்றது உறுதியானது. இதையடுத்து சாமிநாதபுரம் காவல் நிலையத்தின் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ (வயது 51), ஏட்டு சுதாராணி (42) ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவிட்டார்.

    Advertisement

    இதற்கிடையே அதே காவல் நிலையத்தில் 35 வயதாகும் மணிகண்டன் என்பவர் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் பணியில் ஒழுங்கீனமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு வந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை பெற்ற நிலையில், அவரை பணி நீக்கம் செய்து திண்டுக்கல் மாவட்ட காவல் காணிப்பாளர் பிரதீப் உத்தரவிட்டார்.

    English Summary

    Vishal alias Pablu (19), a youth hailing from the Ezhil Nagar area of ​​Okkiyam Thuraipakkam on Chennai's OMR Road, was arrested this morning and brought to the Neelankarai Police Station for interrogation. He subsequently escaped from the police station.