ரிசல்ட் வந்தாச்சு.. அப்புறம் என்ன? விசிகவை கழற்றிவிட வேண்டியதுதான்! விஜய் எடுக்கும் முக்கிய முடிவு!

  • சென்னை: இடைத்தேர்தலில் தவெக வெற்றிப் பெற்றிருக்கும் நிலையில் அக்கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் நிலைமை என்ன? என்பது கேள்வியாக இருக்கிறது. குறிப்பாக விசிகவின் நிலைமை யோசிக்க வேண்டி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    சட்டமன்ற தேர்தலை விட இடைத்தேர்தல் மீதுதான் பலருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. காரணம் தவெகவுக்கு ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் பல இடங்களிலும், தவெகவுடன் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்திருக்கும் விசிக சில இடங்களிலும் தவெகவை விமர்சித்திருந்தன.

    Advertisement

    கம்யூனிஸ்ட் கட்சிகளை பொறுத்தவரை, இந்த இடைத்தேர்தல் தேவையில்லாத ஆணி. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யாமலேயே தவெகவுக்கு மரகதம் குமரவேலும், சத்தியபாமாவும் ஆதரவு கொடுத்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல் ராஜினாமா செய்ததால்தான் தற்போது இடைத்தேர்தல் வந்திருக்கிறது. இது ஜனநாயக விரோதமானது. இந்த தேர்தலில் நாங்கள் தோற்றுவிடுவோம் என்பது உண்மைதான்.. அதற்காக தேர்தலில் பங்கேற்காமல் இருந்தால் தவெவின் தவறுக்கு கம்யூனிஸ்ட்டுகள் துணை போய்விட்டார்கள் என்று சொல்லிவிடக்கூடும் என்பதால் தேர்தலில் நிற்கிறோம் என்று சொல்லி கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    அவர்கள் சொன்னது மாதிரியே தோல்வியடைந்தனர். இரண்டு தொகுதிகளும் தலா 1,000 ஓட்டுகளை மட்டுமே வாங்கினர். ஆனால், கொள்கையில் உறுதியாக இருக்கின்றனர். எனவே கூட்டணியிலிருந்து கம்யூனிஸ்ட்டுகளை தவெக வெளியேற்றுமா? என்கிற கேள்விக்கு இடமில்லை. இன்னொரு விஷயம்.. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 4 எம்எல்ஏக்கள் இருக்கின்றன. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஒரு கட்சியை வெளியேற்றினால்.. இன்னொரு கட்சியும் ஆதரவை வாபஸ் வாங்கிவிடும். எனவே தவெக கம்யூனிஸ்ட் கட்சியை வெளியேற்றாது.

    Advertisement

    ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி டோனில் பேசிய திருமாவளவனுக்கு வெறும் 2 எம்எல்ஏக்கள்தான் இருக்கின்றனர். கடந்த 6ம் தேதி வாக்குப்பதிவு தொடங்கும்போது டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தவெக வெற்றி பெற SIR தான் காரணம் என்று பேசியதையெல்லாம் விஜய் இன்னும் மனசில்தான் வைத்திருக்கிறார்.

    திருமாவளவன் பேசியதாவது, "கடந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றிக்கு தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கைதான் காரணம். இதுதான் செயற்கையான மும்முனை போட்டியை உருவாக்கியது. SIR இல்லாமல் இருந்திருந்தால் வழக்கம் போல திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே இருமுனை போட்டி மட்டுமே நிலவியிருக்கும். SIR நடைமுறை மூலமாக தேர்தல் முடிவுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களை போலவே தமிழகத்திலும் தவெக-வின் வெற்றி என்பது இந்த SIR தாக்கத்தினால் சாத்தியமாகி இருக்கலாம்" என்று கூறியிருந்தார்.

    Advertisement

    இப்படியெல்லாம் பேசிய விசிகவை, தவெக கழற்றிவிட யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. விசிகவுக்கு பதில் பாமகவை இணைத்துக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

    English Summary

    With TVK having won the by-election, the question arises: what is the status of the parties allied with it? Political analysts suggest that the position of the VCK, in particular, warrants consideration.