ஆப்பு வச்சுடுச்சே அரிசி! 15 நாளில் 2 முறை விலை உயர்வு! பட்ஜெட் பற்றாக்குறை.. அல்லாடும் குடும்பங்கள்!

  • சென்னை: கடந்த 15 நாட்களில் இரண்டாவது முறையாக அரிசி விலை உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஒரு கிலோவுக்கு பத்து ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கர்நாடகத்தில் நெல் விளைச்சல் குறைந்துவிட்டதால் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு விலை ஏற்றம் கண்டுள்ளது என கூறுகின்றனர் அரிசி வியாபாரிகள்.

    Advertisement

    தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இலவச அரிசி கொடுக்கப்பட்டாலும், பெரும்பாலானோர் கர்நாடக பொன்னி அரிசி வகைகளை விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். இத்தகைய சூழலில் கர்நாடகத்தில் நிகழாண்டு விளைச்சல் குறைவாகவே இருந்தது.

    Advertisement

    இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் கிலோ 55 ரூபாய் விற்கப்பட்ட கர்நாடக பொன்னி கடந்த 15 நாட்களுக்கு முன்னர் பத்து ரூபாய் விலை ஏற்றம் செய்யப்பட்டு, 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அது மேலும் 15 ரூபாய் விலை உயர்வு கண்டு தற்சமயம் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அரிசி விலை உயர்வு

    25 கிலோ கொண்ட ஒரு சிற்பம் 350 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விலையேற்றம் கண்டுள்ளது. இட்லி அரிசியாக பயன்படுத்தப்படும் அரிசிகள் 35 ரூபாயிலிருந்து கடந்த வாரம் வரை 40 ரூபாய்க்கு விலையேற்றம் செய்யப்பட்டு, தற்பொழுது இரண்டாவது முறையாக 50 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் கர்நாடகத்தில் நெல் விளைச்சல் குறைந்துவிட்டதால் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு விலை ஏற்றம் கண்டுள்ளது.

    Advertisement

    கர்நாடக பொன்னி அரிசி

    இதன் காரணமாக அரிசி லோடு வருவது வெகுவாக குறைந்து விட்டது. இத்தகைய தட்டுப்பாட்டை சமாளிக்க கர்நாடக மாநில வியாபாரிகள் தமிழகத்தில் விளைவிக்கப்படும் நாட்டுப் பொன்னி ரகத்தை ஏற்றுமதி செய்து வருகிறார்கள். இதன் காரணமாக அறுபது ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வந்த நாட்டுப் பொன்னி தற்சமயம் 85 ரூபாய் விலை ஏற்றம் கண்டுள்ளது.

    விளைச்சல் குறைவு

    இது தொடர்பாக வியாபாரிகள் கூறும்போது நாட்டில் பரவலாக ஏற்பட்டுள்ள வறட்சி நெல் உற்பத்தியை வெகுவாக பாதித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் விளைச்சல் குறைவு காரணமாக ஏற்பட்டுள்ள இந்த வகலையற்றம் கவலையாக உள்ளது. குறிப்பாக தமிழகத்திலும் நெல் உற்பத்தி குறைந்துள்ளது கடந்த கோடை சாகுபடியில் ஒரு லட்சத்து 88 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் நிகிலாண்டு 88 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் ஆகி உள்ளது.

    Advertisement

    தண்ணீர் பற்றாக்குறை

    இது தவிர ஆற்றுப் பாசனத்தில் குருவை சாகுபடி நடைபெறாத நிலையில், தமிழக அரசு குருவை தொகுப்பு திட்டம் அறிவித்த போதிலும், அரசு நிர்ணயித்த ஒரு லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி ஆனது, நிகழாண்டு 60,000 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. அதிலும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதால் மகசூல் குறையும் அபாயம் உள்ளது.

    அரிசி பதுக்கல்

    எனவே வறட்சி காரணமாக நெல் சாகுபடியில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த பின்னடைவு இந்நாளில் அரிசி விலை கடுமையாக உயர்வதற்கான வாய்ப்பாக அமைந்து விடும் சூழல் உள்ளதால் பொதுமக்களும் சிறு வியாபாரிகளும் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். மேலும் அரிசி பதுக்களில் யாரும் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் உடனடியாக ஆய்வு செய்து அரிசி பதுக்களில் யாரும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English Summary

    Rice prices increased for the second time in 15 days, putting additional financial pressure on families across Tamil Nadu.