தீபாவளிக்கு ஆன்லைன் ஷாப்பிங்? பணம் மொத்தமாக போய்டும் ஜாக்கிரதை.. மத்திய அரசு வார்னிங்

  • சென்னை: இந்த தீபாவளிக்கு ஆன்லைனில் பொருட்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஒரு முக்கியமான விஷயத்தை உடனே சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஆண்ட்ராய்டு போன்களில் பல பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக மத்திய அரசின் இணையப் பாதுகாப்பு அமைப்பான CERT-In எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

    Advertisement

    இந்த காலத்தில் நம்மில் பெரும்பாலானோர் ஆன்லைன் மூலமாகவே ஷாப்பிங் செய்கிறோம். வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் முதல் தீபாவளி ஷாப்பிங் வரை எல்லாமே ஆன்லைன் தளங்களில் தான் செய்கிறோம். நமது போனை எடுத்து ஆர்டர் போட்டால் சில நிமிடங்கள் அல்லது அதிகபட்சம் சில நாட்களில் நமது பொருள் வீடு தேடி வந்துவிடும்.

    Advertisement

    ஹேக்கிங் ரிஸ்க்

    அதேநேரம் ஸ்மார்ட்போனில் ஹேக்கிங் ரிஸ்க் கூட இருக்கவே செய்கிறது. அதை நாம் மறுக்க முடியாது. இந்த சூழலில் தான் மத்திய அரசின் இணையப் பாதுகாப்பு அமைப்பான CERT-In இப்போது புதிய வார்னிங்கை கொடுத்திருக்கிறது. அதாவது கூகுளின் ஆண்ட்ராய்டு ஆபரேடிங் சிஸ்டத்தில் சில சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது மிகவும் ஆபத்தானவை என CERT-In தெரிவித்துள்ளது. இதை பயன்படுத்தி ஹேக்கர்கள் ஒருவரின் செல்போனுக்குள் ஊடுருவி, தனிப்பட்ட தகவல்களை திருடவும், போனில் அனுமதியில்லாத ஆப்களை இன்ஸ்டால் செய்யவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

    யாருக்கு ஆபத்து

    ஆண்ட்ராய்டு 14, 15, 16, 16 QPR2 மற்றும் 17 ஆகிய வெர்ஷன்களில் இந்த பாதுகாப்புக் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பழைய மாடல் போன்களை பயன்படுத்துபவர்களுக்கு மட்டும்தான் இந்த ஆபத்து என்று நினைத்துவிட கூடாது. லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு வெர்ஷன் பயன்படுத்துபவர்களும் தங்களது போனில் தேவையான பாதுகாப்பு அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

    Advertisement

    கூகுள் பிக்சல், சாம்சங், ஒன்பிளஸ், சியோமி, ரெட்மி, விவோ, ஒப்போ, ரியல்மி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் போன்களிலும் இந்த ஆண்ட்ராய்டு வெர்ஷன்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இந்த பிராண்டுகளின் போன்களை பயன்படுத்துபவர்களும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் போனில் எந்த வெர்ஷன் இருக்கிறது என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள்.


    ஹேக்கர்கள் என்ன செய்ய முடியும்?

    இந்த பாதுகாப்பு குறைபாடுகள் மூலம் ஹேக்கர்களால் செல்போனில் இருக்கும் எல்லா டேட்டாவையும் அணுக முடியும். மேலும், யூசர்கள் தனிப்பட்ட தகவல்களை திருடுவது, செல்போனையே முடக்க கூட முடியும். அதாவது சாதாரணமாக ஒரு செயலிக்கு இருக்கும் பெர்மிஷன்களை காட்டிலும் கூடுதல் பெர்மிஷன்களை பெற்று செல்போனில் இருக்கும் தகவல்களை ஹேக்கர்கள் திருடும் ஆபத்து இருக்கிறது.

    Advertisement

    பாதுகாப்பது எப்படி?

    இந்த பிரச்சனையைத் தவிர்க்க, உங்கள் செல்போனில் பாதுகாப்பு அப்டேட் உள்ளதா என்பதை உடனே செக் செய்ய வேண்டும்.

    1. முதலில் உங்கள் போனில் உள்ள Settingsக்கு செல்லுங்கள்.

    2. அங்கு System அல்லது Software Update என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.

    3. புதிய அப்டேட் ஏதேனும் உள்ளதா என சரிபார்க்கவும்.

    4. அப்டேட் இருந்தால் அதை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.

    மேலும், தெரியாத இணையதளங்களில் இருந்து ஆப்களை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும். ப்ளேஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வ செயலிகளில் இருந்து மட்டுமே ஆப்களை டவுன்லோடு செய்யவும். குறிப்பாக, தீபாவளி ஷாப்பிங் செய்யும்போது நம்பகமான செயலிகளை மட்டுமே பயன்படுத்துவது நல்லது.

    English Summary

    CERT-In has warned Android users about critical security vulnerabilities(ஆன்டிராய்டு செல்போன்களில் இருக்கும் ரிஸ்க்): Risks in Android Mobiles latest news in tamil.