சென்னை OMR சாலையில் திரண்ட 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள்.. 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு!

  • சென்னை: சென்னை கேளம்பாக்கம் தையூர் அருகே இளைஞர் கொல்லப்பட்ட நிலையில், 500க்கும் மேற்பட்டவர்கள் ஓ.எம்.ஆர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Advertisement

    கேளம்பாக்கம் தையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. தவெக நிர்வாகியாக உள்ளார். இவரது மகளை பிரவீன் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பிரவீன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்டார்.

    Advertisement

    இதில் பலத்த காயமடைந்த பிரவீன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 20 ஆம் தேதி உயிரிழந்தார். பிரவீன் உடல் நேற்று இரவு கொண்டு வரப்பட்ட நிலையில், அவரது உடலை சாலையில் வைத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், பிரவீனை, தவெக பிரமுகர் கூலிப்படையை ஏவி கைது செய்துவிட்டதாக குற்றம்சாட்டி, சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கோரி, பிரவீனின் நண்பர்கள், உறவினர்கள் என 500க்கும் மேற்பட்டோர் ஓ.எம்.ஆர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    தவெக நிர்வாகி ஏழுமலை கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணின் சகோதரர் கவுதம், கூலிப்படையைச் சேர்ந்த நிதிஷ், மணிகண்டன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். பிரவீனை கொலை செய்த கூலிப்படை கும்பலின் தலைவனான சதீஷை போலீசார் தேடி வருகின்றனர்.

    Advertisement

    பிரவீன் கொலைக்கு நீதி கேட்டு, அவரது உறவினர்கள், நண்பர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஓ.எம்.ஆர் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் என காவல்துறை உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    English Summary

    A major commotion ensued near Thaiyur, Kelambakkam (Chennai), after a young man was killed; over 500 people staged a road blockade on OMR, disrupting traffic for approximately two hours.