பண்ருட்டியில் ரூ.1,000 கோடி பஞ்சமி நிலத்தில் மோசடி.. அமைச்சர்களுக்கு தொடர்பு.. வேல்முருகன் புகார்

  • சென்னை: தவெக ஆட்சியமைத்து 3 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊழலை ஒழிப்பேன் என முதலமைச்சர் விஜய் கூறினார். ஆனால் தவெக பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்து வருகின்றன. பழனியில் அரசுக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்தில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. தற்போது பண்ருட்டியில் ரூ.1,000 கோடி மதிப்பிலான 100 ஏக்கர் பஞ்மி நிலத்தை ரியல் எஸ்டேட் மூலம் விற்பனை செய்து தவெக அரசில் மோசடி செய்வதாக வேல்முருகன் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

    Advertisement

    புதிய தமிழக கிருஷ்ணசாமி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வேல்முருகன் கூறுகையில், "பண்ருட்டி வட்டத்தில் 100 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. முன்பு ஒரு பணக்கார நிறுவனம், உங்களில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தருகிறேன் என்று அந்த மக்களிடம் நிலத்தை வாங்கி ஒரு தொழிற்சாலையை தொடங்கினர். கொஞ்ச நாளில் அந்த நிறுவனத்துக்கு மஞ்சள் நோட்டீஸ் அனுப்பி அந்நிறுவனத்தை மூடிவிட்டனர்.

    Advertisement

    1,000 கோடி மதிப்பிலான நிலம்

    இப்போது அந்த பகுதியில் ரியஸ் எஸ்டேட் உச்சத்தில் உள்ளது. ஒரு ஏக்கர் நிலம் ரூ.10 கோடிக்கு விற்பனையாகிறது. 100 ஏக்கரின் தற்போதைய மதிப்பு ரூ.1,000 கோடியாகும். அந்த பஞ்சமி நிலத்தில் குடிசை மாற்று வாரியம் மக்களுக்கு வீடு கொடுங்கள் அல்லது தொழிற்கூடம் அமைத்து அந்த மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள் என கடந்த 3 வருடங்களாக நான் போராடி வருகிறேன். கடந்த திமுக ஆட்சியில் இதுதொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருந்தேன்.

    ஊழலை ஒழிக்கிறேன் என தவெக ஆட்சியமைத்துள்ளது. தவெக அமைச்சர்களின் தலையீட்டில், பத்திரப்பதிவு கூடுதல் ஐ.ஜி ஆலோசனையில் அந்த 100 ஏக்கர் நிலத்தை பிளாட் போட்டு விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். 30 வருடமாக மக்களுக்கு கொடுக்க வேண்டுமென போராடி வருகிறோம். ஆனால் தற்போது அந்த நிலத்தை விற்று ஊழல் செய்து வருகிறார்கள். தவெக அரசு மக்களை பற்றி யோசிக்காமல், தனியார் நிறுவனத்தின் முதலாளிக்கு ஆதரவாக உள்ளது.

    Advertisement

    தவெக அரசில் மோசடி

    இந்த நிலம் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்டது என்று 1924 ஆம் ஆண்டில் இருந்து நான் தகவல் எடுத்துள்ளேன். இது பஞ்சமி நிலம், இதை விற்கவோ வாங்கவோ கூடாது என்று அப்போதைய தாசில்தார் அறிவிப்பு வெளியிட்டார். இதை ரியல்எஸ்டேட்டில் விற்பனை செய்தால் பத்திரப்பதிவில் ஊழல் நடக்கிறதா இல்லையா. ஏழை மக்களுக்கு, பட்டியலின மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்கிறார்கள்.

    இதுகுறித்து துறையின் செயலாளர் குமரகுரு ஐ.ஏ.எஸ்க்கு தொடர்பு கொண்டு, இது பஞ்சமி நிலம். பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டது. இதை ரியல் எஸ்டேட் மூலம் விற்பனை செய்ய முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். அதையும் மீறி மேலிடத்தின் உத்தரவின் அடிப்படையில் நிலத்தை விற்பனை செய்ய முயற்சிப்பதாக கூறுகிறார்கள். பட்டியலின மக்களின் நிலத்தை விற்பதற்கு எந்த மேலிடம் அனுமதித்தது. ஊழலை ஒழிப்பேன் என கூறிய முதலமைச்சர், பத்திரப்பதிவு துறை அமைச்சர் இதற்கு பதில் கூறுவார்களா" என கேள்வி எழுப்பினார்.

    English Summary

    Velmurugan has made a sensational allegation that 100 acres of Panchami land in Panruti, valued at Rs 1,000 crore, is being sold through real estate deals, amounting to a fraud.