60 நாட்களில் ரூ.20,000 கோடி கடன்.. தவெக அரசை வெளுத்த கே.என்.நேரு

  • சென்னை: தவெக ஆட்சியமைத்து 3 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளது. சட்டசபையில் பட்ஜெட் விவாதம் நடைபெற்றது. ஒவ்வொரு மக்கள் மீதும் கடன் வாங்கிய விவகாரத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன், திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது.

    Advertisement

    சட்டமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் பேசுகையில், "தங்களின் தலைவர்களை எங்கே தேடுவோம், எங்கே பார்ப்போம் என திமுக உறுப்பினர்கள் கூறியுள்ளனர். மகளிர் உரிமை தொகை தேடினால் அவர்கள் தலைவர் பெயர்தான் வரும் என கூறினார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மக்களின் மீதும் ரூ.1,28,000 கடனை விட்டு சென்றது நீங்கள் தான். அங்கே தான் உங்கள் தலைவரை தேட வேண்டும். ஒவ்வொருவரின் தலை மீது ரூ. 1.28 லட்சம் கடன் உள்ளது. இதை நான் சொல்லவில்லை" என்றார்.

    Advertisement

    ரூ.1.28 லட்சம் கடன்

    அப்போது திமுக உறுப்பினர்கள் கொந்தளித்தபடி பதில் அளிக்க முயற்சித்தனர். அதற்கு மரிய வில்சன், "ரிலாக்ஸாக இருங்க. கூலாக இருங்க. நான் சொல்றதே கேளுங்க சார். ஒவ்வொரு மக்களின் மீதும் ரூ.1,28,000 கடன் ஏற்படும் வரலாற்றை படைத்தது முந்தைய திமுக ஆட்சிதான். அவர்களின் நிர்வாக குளறுபடியும், தவறான நிதி மேலாண்மை கொள்கை தான் காரணம். நாங்கள் 50 வருடங்களாக ஆட்சியில் இல்லை. ரிலாக்ஸாக இருங்க. நீங்க கத்தறதால் எந்த பலனும் இல்லை. இப்படி கூட்டமாக கத்தி கொண்டே தான் இருக்க வேண்டியதுதான்.

    Advertisement

    நாங்கள் ஒன்றும் பொய் சொல்லவில்லை. வெள்ளை அறிக்கையில் சொல்லியதைத்தான் சொல்லியுள்ளோம். நாங்கள் புதிதாக எதையும் சொல்லவில்லை. ஒவ்வொருவரின் தலை மீது. ரூ. 1.28 லட்சம் கடன் என்பது அவர்கள் விட்டு சென்ற கடன். அவர்கள் தலைவரை மகளிர் உரிமை தொகையில் தேடுவார்களாம். அப்போது இந்த கடனை எங்கே தேடுவதாம். இதையெல்லாம் சேர்த்துதான் பட்ஜெட்டில் சொல்லியுள்ளோம்" என்றார்.

    ரூ.20,000 கோடி கடன்

    திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு அளித்த பதிலில், "பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு நிதித்துறை செயலாளர் தெளிவாக சொல்லியுள்ளார். கடன் என்பது இன்னும் 50 வருடங்களானாலும் அதை அடைப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் ஒவ்வொரு அரசும் கடன் வாங்கித்தான் செயல்பட முடியும் என்பதை நிதித்துறை செயலாளரே தெளிவுபடுத்தியுள்ளார். தனி நபர் கடன் எங்கள் ஆட்சியில் ரூ. 1.28 லட்சம் கடன் இருக்கிறது என்றால், நீங்கள் ஆட்சிக்கு வந்த 60 நாட்களில் 20,000 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதை நாங்கள் ஒரு குறையாக சொல்லவில்லை. அரசாங்கம் நடத்துவதற்கு கடன் முக்கியம். மாநிலத்தில் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தான் கடன் வாங்கப்படுகிறது. ஒரு அரசு எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்வது ரிசர்வ் வங்கி. அவர்களின் அனுமதியில்லாமல் அரசு கடன் வாங்க முடியாது. ரிசர்வ் வங்கி அனுமதியுடன் தான் கடன் வாங்கப்பட்டது. எவ்வளவு கடன் வாங்கப்பட்டது என்பதை விட, எவ்வளவு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது, புதிய திட்டங்கள் வந்துள்ளது என்பதைத்தான் பார்க்க வேண்டும்" என்றார்.

    English Summary

    A heated exchange took place between Finance Minister Maria Wilson and former DMK Minister K.N. Nehru regarding the issue of debt incurred on behalf of the people.