வைத்திலிங்கத்திற்கு சிக்கல்.. ரூ.28 கோடி ஊழல் வழக்கை விசாரிக்க வேண்டும்.. சென்னை நீதிமன்றம் உத்தரவு

  • சென்னை: அடுக்குமாடி கட்டிடத்துக்கு திட்ட அனுமதி வழங்க தனி​யார் கட்​டு​மான நிறு​வனத்​திடம் ரூ.28 கோடி லஞ்​சம் பெற்​ற​தாக தொடரப்பட்ட வழக்கில், முன்​னாள் அமைச்​சர் வைத்தி​லிங்​கம் மீது மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையை முடித்து 3 மாதங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்யவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    2011 முதல் 2016 வரையி​லான அதி​முக ஆட்​சிக்​காலத்​தின் போது வைத்திலிங்கம் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த போது அவர் மீது ரூ.28 லட்சம் கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

    Advertisement

    ரூ.28 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார்

    கடந்த 2011 - 2016 ஆம் ஆண்டு வரையி​லான அதி​முக ஆட்​சிக்​காலத்​தில், வீட்டு வசதித் துறை அமைச்​ச​ராக இருந்தவர் வைத்​தி​யலிங்​கம். அப்போது, சென்னை பெருங்​களத்​தூர் ஸ்ரீராம் ப்ராப்​பர்ட்​டீஸ் என்ற அடுக்​கு​மாடி கட்​டிடத்​துக்கு திட்ட அனு​மதி அளிப்பதற்காக ரூ.28 கோடி லஞ்​சம் பெற்​ற​தாக இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

    கடந்த 2022 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது, இதுதொடர்​பாக அறப்​போர் இயக்​கம் சார்​பில் வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்​புத் துறை​யில் புகார் அளிக்​கப்​பட்​டது. அதன்பேரில் விசாரணை நடத்தி வந்த லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2024 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

    Advertisement

    விசாரணை நடத்த உத்தரவு

    அப்போது, வைத்​தி​லிங்​கத்​துக்கு எதி​ரான குற்​றச்​சாட்​டுக்​களுக்கு போது​மான ஆதா​ரங்​கள் இல்லை என்றும், எனவே வழக்கை முடித்து வைக்கவும் லஞ்ச ஒழிப்​புத் துறை சார்​பில் அறிக்கை தாக்​கல் செய்​யப்​பட்​டு இருந்தது. இந்த மனு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிரான ஊழல் வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை மேல் விசாரணை நடத்த முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும், விசாரணையை முடித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    நீதிமன்றம் உத்தரவை அடுத்து, வைத்திலிங்கம் மீதான விசாரணையை தீவிரப்படுத்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர். முன்னதாக கடந்த தேர்தலுக்கு முன், திமுகவில் இணைந்ததால் வைத்திலிங்கம் மீதான வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறையால் முடித்து வைக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

    English Summary

    Vaithilingam: The Chennai Principal Sessions Court has ordered the Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) to conduct further investigation into former Minister Vaithilingam regarding a case involving the alleged acceptance of a ₹28 crore bribe from a private construction firm to grant planning permission for a multi-story building.