ரூ.700 கோடியை விழுங்கிய தேவநாதன் யாதவ்.. மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்தோர் கதறல்

  • சென்னை: தொழிலதிபரும், அரசியல்வாதியுமான தேவேந்திர யாதவின் மயிலாப்பூர் நிதி நிறுவனம் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம் இருந்து ரூ.700 கோடி வரை மோசடி செய்துள்ளது. இந்த பணம் திரும்ப கிடைக்காத நிலையில் முதலீடு செய்தவர்கள் தேவநாதன் யாதவின் சொத்துகளை விற்பனை செய்து பணத்தை உடனடியாக தர வேண்டும் என்று கூறி கதறிய சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.

    Advertisement

    தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் தேவநாதன் யாதவ். நிதி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அதோடு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் என்ற கட்சியையும் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    Advertisement

    தேவநாதன் யாதவ் மீது மோசடி வழக்குகள் உள்ளன. இவர் 'மயிலாப்பூர் இந்து பெர்மனன்ட் ஃபண்ட் நிதி லிமிடெட்'என்ற நிறுவனம் நடத்தி சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ரூ.700 கோடி வரை மோசடி செய்ததாக வழக்கு உள்ளது. பெரும்பாலானவர்கள் 60 வயது கடந்த முதியவர்கள். தங்களின் இறுதி கால தேவைக்காகவும், அதிக வட்டியை நம்பியும் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர்.

    இந்த மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் சிறையில் உள்ளார். மேலும் மோசடி தொடர்பான வழக்கு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இதனால் மோசடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை. விரைவாக விசாரணை நடத்தி பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தின் அருகே தொடர் போராட்டத்தையும் தொடங்கி உள்ளனர்.

    Advertisement

    தேவநாதன் யாதவிற்கு சொந்தமான சொத்துகளை விற்பனை செய்து தங்களின் பணத்தை திரும்ப தர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்த வழக்கு விசாரணை மெதுவாக நடக்கிறது. விரைவாக வழக்கு விசாரணையை நடத்த தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    இதுதொடர்பாக பணத்தை இழந்த 80 வயதை கடந்த சண்முக சுந்தரம் என்பவர் கூறுகையில், ''மயிலாப்பூர் இந்து பெர்மனன்ட் ஃபண்ட் நிதி' நிறுவனத்தி்ல ரூ.68 லட்சம் முதலீடு செய்தேன். வங்கியில் இருந்த பணம் மட்டுமின்றி எனது சொத்துகளை விற்பனை செய்து இந்த பணத்தை முதலீடு செய்தேன்.

    Advertisement

    வங்கியை விட 2 சதவீதம் கூடுதல் வட்டி தருவோம் என்பதால் இங்கு முதலீடு செய்ததோடு, முதுமை காலத்தில் உதவும் என்று நினைத்தேன். ஆனால் இன்று ஏமாந்து போய் நிற்கிறேன். புற்றுநோயுடன் போராடிய எனது நாத்தனாரை காப்பாற்ற முடியவில்லை. பணம் இல்லாததால் அவருக்கு என்னால் உதவ முடியவில்லை. இந்த விஷயத்தில் அரசு தலையீடு செய்து பணத்தை விரைவாக திருப்பி தர வேண்டும்'' என்றார்.

    தேவிகா என்பவர் கூறுகையில், '' கடைசி காலத்தில் பணத்துக்காக யாரையும் நம்பி இருக்க வேண்டாம் என்பதால் என் மகனிடம் கூட கொடுக்காமல் ரூ.48 லட்சத்தை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தேன். ஆனால் இன்று பணத்தை பறிகொடுத்து நிற்கிறேன்'' என்று கண்கலங்கினார்.

    Advertisement

    இதய நோயாளியாக இருக்கும் ஜெயஸ்ரீ கூறுகையி்ல, ''எனது குடும்பம் ரூ.10 லட்சத்தை இழந்துள்ளது. மாதந்தோறும் ரூ.9ஆயிரம் வட்டியாக கிடைத்தது. தற்போது அதுவும் நின்றுவிட்டது. முதலீடு பணமும் கிடைக்கவில்லை. எங்களின் வாழ்க்கை தற்போது கடினமானதாக மாறி உள்ளது. மருந்து வாங்க கூட பணம் இல்லை'' என்றார்.

    English Summary

    The Mylapore-based financial firm owned by businessman and politician Devendran Yadav has defrauded over 5,000 people of approximately Rs.700 crore. With no prospect of recovering their money, the investors' desperate pleas—demanding that Devendran Yadav’s assets be sold to immediately repay them—were truly heart-wrenching.