விஜய் குதிரை பேரம்.. ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்திற்கு போவோம்.. ஆர்எஸ் பாரதி!

  • சென்னை: முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆளுநர் அர்லேகரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறினார். குதிரை பேரத்தில் ஈடுபட்ட விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கையை தொடங்குவோம் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும், அதற்கு ஆதாரம் இருப்பதாகவும் கூறி ஆளுநர் அர்லேகரிடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி புகார் கடிதம் அளித்தார். இதன்பிற்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    Advertisement

    கரூரில் உண்மைக்கு மாறாக விஜய் பேசியுள்ளார்.. அவரது பேச்சு விசாரணையை பாதிக்கும் வகையில் இருந்தது. கரூர் சாட்சிகளை முதல்வர் விஜய் அச்சுறுத்துவதாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பு குழுவில் புகார் அளித்துள்ளோம். சிபிஐக்கு விஜய் பேசியதை அனுப்பி வைத்து இருக்கிறோம். ஆளுநர் நடவடிக்கை எடுக்க அவகாசம் வழங்குவோம். அவர் நடவடிக்கை எடுக்காவிடில் சட்ட நடவடிக்கையை தொடங்குவோம்.

    ஏற்கனவே திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. அதில் நீதிபதிகள் கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடந்துகொண்டு இருக்கிறது. எனவே நீங்கள் எதுவாக இருந்தாலும் அங்கே முறையிடுங்கள் என்று நீதிமன்றம் கூறியது. இதையடுத்து தான் கரூரில் விஜய் பேசியது குறித்து நாங்கள் ஓய்வு பெற்ற நீதிபதியிடம் கொடுத்துள்ளோம்.

    Advertisement

    கரூர் சம்பவம் குறித்து விஜய் அவர் பேச்சை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளோம். சிபிஐக்கும் அனுப்பி வைத்து இருக்கிறோம். ஓய்வு பெற்ற நீதிபதியும் விஜய்யின் பேச்சை சிபிஐக்கு அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்து இருக்கிறது. கரூரில் விஜய் 10 ஆம் தேதி பேசும்போது எவ்வளவு தில்லுமுல்லு செய்தார் என்பது எல்லாருக்கும் தெரியும்.

    விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டார் என்பதற்கு ஏற்கனவே கடந்த 4 ஆம் தேதி ஆளுநரை சந்தித்து புகார் கொடுத்தோம். அந்த புகாரில் வைகோ கொடுத்த கருத்தை வைத்து தான் நாங்க புகார் கொடுத்தோம். அதே போல தற்போது எம். ஆர் விஜயபாஸ்கரும் தவெகவில் இருந்து சேர சொன்னார்கள். அதனால் தான் ராஜினாமா செய்தோம், தவெகவில் சேர்ந்தோம் என்று அவரே வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். இவையெல்லாம் தான் தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரம். இவற்றை நாங்கள் ஆளுநரிடம் புகார் கொடுத்துள்ளோம்.

    Advertisement

    விஜய் கரூரில் உண்மைக்கு மாறாக பேசியுள்ளார். கொளத்தூரில் கொத்து புரோட்டோ என்று கீழ்த்தரமாக பேசுகிறார். இதற்கு எடப்பாடி தரமாக பதிலடி கொடுத்து இருக்கிறார். நாங்க சாப்பிட்டு போட்ட எச்சில் இலைகள் தான் அங்க போய் சேர்ந்துவிட்டது என்று சொல்லியிருக்கிறார்.

    எச்சி இலைகளை வைத்துக்கொண்டு அதற்கு ஒரு விழா நடத்துகிறார்கள். இரு விஜயபாஸ்கர்களும் அதிமுகவில் இருந்து தான் வெற்றி பெற்றார்கள். விஜய் இப்படி பேசினால், நாங்களும் இப்படி பதில் சொல்வோம்.. என்று கூறினார்.

    English Summary

    RS Bharathi submitted a petition to the Governor seeking criminal and conspiracy charges against Vaiko, alleging that DMK MLAs were persuaded to resign through political bargaining and demanding a detailed investigation.