அதிமுக எம்எல்ஏக்கள் மாதிரி ராஜினாமா செய்ய தயாரா? வெளியேறிய முஸ்லிம் லீக்.. திமுக ஆர்எஸ் பாரதி கோபம்

  • சென்னை: அதிமுக எம்எல்ஏக்களை போல ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா? என திமுக கூட்டணியில் இருந்து விலகிய ஐயூஎம்எல்-க்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தேர்தலுக்கு முன்பே கூட்டணியை விட்டு விலகியிருந்தால் திமுக கூடுதல் இடங்களில் போட்டியிட்டிருக்கும் என்றும், யார் நண்பர்கள், யார் பகைவர் என இந்த தேர்தல் எங்களுக்கு அடையாளம் காட்டிவிட்டது என்றும் அவர் கூறினார். மேலும் கூறிய அவர், முஸ்லீம் லீக் முடிவினையே மதிமுகவும் எடுக்கும் என ஆர் எஸ் பாரதி பேசினார்.

    Advertisement

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் தமிழக அரசியல் களத்தை புரட்டி போட்டுள்ளது. திராவிட கட்சிகளை தவிர்த்து, கட்சி ஆரம்பித்த 2 ஆண்டுகளில் விஜய்யின் தவெக ஆட்சியை பிடித்துள்ளது. தனித்து தேர்தலை சந்தித்த இந்த கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்துள்ளது.

    Advertisement

    இது மட்டும் இன்றி தங்களுக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ், ஐயூஎம்.எல், விசிக கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கும் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஐயுஎம்.எல் கட்சியின் மாநில குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 60 ஆண்டுகளாக திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வந்த இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு எடுக்கப்பட்டது.

    அதாவது வரும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தவெகவுடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் என அறிவித்தது. இதனால் 60 ஆண்டுகளாக திமுகவுடன் இருந்த கூட்டணி முறிந்துள்ளது. தேர்தலுக்கு முன்பு திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ஐயுஎம்.எல் தேர்தலுக்கு பிறகு தவெகவுடன் கூட்டணி அமைத்தது பற்றி திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், அதிமுக எம்எல்ஏக்களை போல ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா? என்று கூறினார்.

    Advertisement

    ஆர்.எஸ் பாரதி கூறியதாவது:- தேர்தலுக்கு முன்பே கூட்டணியை விட்டு விலகியிருந்தால் திமுக கூடுதல் இடங்களில் போட்டியிட்டிருக்கும். யார் நண்பர்கள், யார் பகைவர் என இந்த தேர்தல் எங்களுக்கு அடையாளம் காட்டிவிட்டது. இந்த தேர்தல் அதிசயமான தேர்தல். முஸ்லீம் லீக் முடிவினையே மதிமுகவும் எடுக்கும்" என்றார்.

    English Summary

    RS Bharathi said the bypoll has clearly identified political friends and foes. Commenting on IUML's exit from the DMK alliance, he claimed the party could have contested more seats had the ally withdrawn before the election announcement.