RSS பேரணிக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு.. SIR போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு! தவெக அரசு சூப்பர்

  • சென்னை: நேற்று சென்னையில் முதலமைச்சர் விஜய்யின் சட்டமன்ற தொகுதியான பெரம்பூர் உட்பட தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அமைப்பு பேரணியை நடத்தியிருக்கிறது. மதவாத சக்திகளுக்கு எதிராக இருப்போம் என்று சொல்லும் முதலமைச்சர் விஜய், ஏன் இதை அனுமதித்தார்? அதே நேரம்.. SIR விவகாரத்தில் போராட்டம் நடத்த ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.

    Advertisement

    பாஜகவின் தாய் அமைப்பான RSS ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி மற்றும் RSS ஸ்தாபன நாளில் நாடு முழுவதும் பேரணிகளை நடத்துகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் பேரணியை நடத்தி வருகிறது. ஆனால், கடந்த திமுக ஆட்சியில் பேரணிக்கு போலீசார் தடை விதித்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    Advertisement

    வேடிக்கை பார்க்க கூடாது

    இருப்பினும் நீதிமன்றம் சென்று தடைக்கு தடை வாங்கி.. பேரணி நடத்தி வருகிறது RSS அமைப்பு. இந்த ஆண்டும் இதே நிலைமைதான். தவெக அரசு தடை போட.. சென்னை உயர்நீதிமன்றம் போய், அனுமதி வாங்கி பேரணியை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது RSS. இந்தியா ஜனநாயக நாடு.. எந்த அமைப்பு வேண்டுமானாலும் பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்தலாம். அது பிரச்சனை இல்லை. ஆனால், தீவிர வலதுசாரி அமைப்புகள் இப்படியான பேரணியை நடத்துவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்க கூடாது என்றே பலரும் கூறுகின்றனர்.

    வெட்ட வெளிச்சமாக தெரிந்த குளறுபடிகள்

    சரி.. தவெக அரசு கொஞ்சம் பெரிய மனசு பண்ணி.. RSS பேரணிக்கு நீதிமன்ற உத்தரவின்படி அனுமதி கொடுத்திருக்கிறது. ஆனால், அதே அனுமதி ஏன் SIR போராட்டங்களுக்கு கொடுக்கப்படவில்லை? இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக உள்ள ஞானேஷ்குமார், படிவம் 6ல் தன்னிச்சையாக மாற்றங்களை செய்து, கோடிக்கணக்கான தகுதியான வாக்காளர்களை.. வாக்களிக்கவிடாமல் செய்துவிட்டார் என்பது குற்றச்சாட்டு. குற்றச்சாட்டை உறுதி செய்யும் விதமாக, தேர்தல் ஆணையம் தனது முடிவுகளை திரும்ப பெற்று வருகிறது.

    Advertisement

    இப்படி தேர்தல் சிஸ்டத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் வெளிப்படையாகவே தெரிய வந்த பிறகும், ஞானேஷ் குமார் ஏன் இன்னும் அந்த பதவியில் நீடிக்கிறார் என்பது எதிர்க்கட்சிகளின் கேள்வி.

    போராட்டக்காரர்கள் கைது

    வெறும் கேள்வியுடன் நின்றுவிடாமல்.. எதிர்க்கட்சிகள் ரோட்டில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் இந்த போராட்டம் கொஞ்சம் லேட்டாக தொடங்கினாலும், தீவிரமாகவே நடைபெற்று வருகிறது. இடதுசாரி மாணவர், இளைஞர் அமைப்புகள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றன. ஆனால், இந்த போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி.. போராட்டக்காரர்கள் அதிரடியாக கைது செய்திருக்கிறது தமிழக காவல்துறை.

    இது ஒன்னும் RSS பேரணி கிடையாது

    SIR நடைமுறைக்கு தவெகவும் எதிராகத்தான் இருக்கிறது. ஆனால், மத்திய அரசுக்கு எதிராக மாணவர்களும், இளைஞர்களும் நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுக்காமல்.. அனுமதி மறுத்து, கைது நடவடிக்கையில் இறங்கியிருப்பது தவெக அரசின் டபுள் ஸ்டாண்டை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. போராட்டக்காரர்கள் நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கி வந்து நடத்த.. இது ஒன்றும் RSS பேரணி கிடையாது. கோடிக்கணக்கான வாக்காளர்களின் உரிமைகாக நடத்தப்படும் சீரியஸான போராட்டம். இந்த போராட்டங்களுக்கு பெர்மிஷன் கொடுக்க காவல்துறை மறுப்பது ஏன்?

    Advertisement

    காணாமல் போய்விடும்

    நமக்கு எதுக்கு வம்பு? நீதிமன்றம் போய் அனுமதி வாங்கி போராட்டங்களை நடத்திக்கொள்ளட்டும்.. நாம் இதில் தலையிட்டு மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் ஏன் சிக்கிக்கொள்ள வேண்டும் என தவெக அரசு நினைக்கிறதோ? அப்படி நினைத்தால்.. நீண்ட காலத்திற்கு இதே நிலைப்பாட்டில் முதலமைச்சர் விஜய்யால் இருக்க முடியாது. ஏதேனும் ஒரு பக்கம் சாய்ந்துதான் ஆக வேண்டும். இல்லையெனில் தவெக காணாமல் போய்விடும் என அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

    English Summary

    RSS Rally Security vs SIR Protest Ban: Yesterday, the RSS held marches in 128 locations across Tamil Nadu—including Perambur, the assembly constituency of Chief Minister Vijay. Why did Chief Minister Vijay, who claims to stand against communal forces, permit this? At the same time, questions are being raised as to why permission is being denied for protests regarding the 'SIR' issue.