தஞ்சை பெரிய கோவில் படத்துடன் புதிய ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகம்?

  • சென்னை: இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு வரை புழக்கத்தில் இருந்து வந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதன் பிறகு ஒரே நாளில் செல்லாது என்று அறிவிக்கப்பட்டன. அப்போது 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஒரு கட்டத்தில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டன. தற்போது 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே உலகத்தில் உள்ளன. இந்த சூழலில் 1,000 ரூபாய் நோட்டுகள் அடுத்த மாதம் 15-ந்தேதி வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. ஆயிரம் ரூபாய் நோட்டு என்பது வதந்தி என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

    Advertisement

    இந்தியாவில் ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுகிறது. தற்போது ஒரு ரூபாய் நாணயம் முதல் அதிகபட்சமாக ரூ.500 மதிப்பில் ரூபாய் நோட்டுகள் வரை புழக்கத்தில் உள்ளன. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக மக்களின் கைகளில் இருந்து வந்ந ரூ.1,000 நோட்டுகளை கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி மத்திய அரசு ஒரே நாளில் திரும்பப் பெற்றது. அதன் பின்பு 2000 ரூபாய் நோட்டுகள், 200 ரூபாய் நோட்டுகள், புதிய 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் புதிய 100 ரூபாய் நோட்டுகள் வந்தன. இதில் 2000 ரூபாய் நோட்டுகள் இப்போது புழக்கத்தில் இல்லை. இந்த சூழலில் 1,000 ரூபாய் நோட்டுகளை புதுவடிவில் ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் அண்மையில் தகவல் பரவியது. மக்களா நம்பும் வகையில் பதிவுகள் பரவியது.

    Advertisement

    அதில், அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி முதல் அந்த ரூபாய் நோட்டுகள் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பொறிக்கப்பட்டுள்ள மஞ்சள் நிறத்திலான அந்த ரூபாய் நோட்டுகளை பலரும் பகிர்ந்து வந்தார்கள். சிலர் அந்த ரூபாய் நோட்டுகளை கைகளில் வைத்திருப்பது போன்று புகைப்படங்களை பதிவேற்றி வந்தனர்

    இந்த நிலையில், 1,000 ரூபாய் நோட்டுகள் வெளியாக உள்ளதாக பரவும் தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், 1,000 ரூபாய் நோட்டு வெளியிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானது. அதுபோல, 1,000 ரூபாய் நோட்டுகள் வெளியிட உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை. அரசு தரப்பில் இருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வ தகவலை மட்டுமே நம்பவேண்டும் " இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்தியாவில் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 ஆகிய 6 மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. 50 பைசா, 1 ரூபாய், 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நோட்டுகள் இப்போது புழக்கத்தில் இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அவை நின்றுவிட்டன.

    English Summary

    Reports are circulating on social media claiming that 1,000-rupee notes will be issued on the 15th of next month. The central government has denied this, stating that the information regarding 1,000-rupee notes is merely a rumor.