சில்லுண்டிகளை வச்சிக்கிட்டு? தவெக விஜய் அரசை துவம்சம் செய்த எச்.ராஜா.. அண்ணாமலைக்கும் விழுந்த செக்

  • சென்னை: பாஜகவில் இருந்து விலகி அரசியலில் பிரகாசித்தவர் ஒருவர் கூட கிடையாது என்று அண்ணாமலையை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மறைமுகமாக விமர்சித்துள்ளார்..
    தமிழ்நாட்டில் பெரும்பான்மை இல்லாமல், சில்லுண்டிகளை (சில்லுண்டிகள்) சேர்த்துக் கொண்டு, அதன்மூலம் பெரும்பான்மையைக் காட்டி விஜய் ஆட்சி அமைத்துள்ளார் என்று தவெக அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது, "பாஜக என்பது ஒரு சித்தாந்த ரீதியிலான அமைப்பு மற்றும் கட்சி.

    Advertisement

    தவெக அரசு

    காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே சென்றவர்கள் கூட அரசியலில் சிறந்து விளங்கி, பெரிய மனுஷன் ஆனவர்கள் உண்டு. ஆனால், பாஜகவில் இருந்து வெளியே சென்று அரசியலில் பிரகாசித்தவர்கள் என்று ஒருவர் கூட கிடையாது.

    அண்ணாமலை தற்போது பாஜகவில் இல்லாததால் அவரைப் பற்றி பேச வேண்டியதில்லை. அவர் பாஜகவை விட்டு வெளியேறியதால் கட்சிக்கு எந்தவொரு பின்னடைவும் இல்லை. அண்ணாமலை இல்லாதபோது, கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணி 19 சதவீத வாக்கு வங்கியை வைத்திருந்தது. ஆனால், அண்ணாமலை இருந்தபோது 2024-ம் ஆண்டு தேர்தலில் பெற்ற வாக்குகள் 18 சதவீதம் தான். அண்ணாமலை இருந்தபோது ஒரு சதவீத வாக்குகள் குறைந்துள்ளது.

    Advertisement

    சில்லுண்டிகள் - பரந்தூருக்கு ஏன் போகல

    தமிழ்நாட்டில் பெரும்பான்மை இல்லாமல், சில்லுவண்டிகளை (சில்லுண்டிகளை) சேர்த்துக் கொண்டு, அதன்மூலம் பெரும்பான்மையைக் காட்டி விஜய் ஆட்சி அமைத்துள்ளார்.

    தவெக அரசு சில்லுண்டிகளைச் சேர்த்துக்கொண்டுதான் பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. கடந்த 35 நாட்கள் ஆட்சியில் 40-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன. 30 நாளில் 40-க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 3 வயது குழந்தைகூட பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளது. பிஞ்சு குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பிச்சு வீசப்படுகின்றனர்.

    பரந்தூருக்குப் பறந்து போனவர், ஏன் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கப் போகவில்லை? விஜய் ஒரு பொறுப்புள்ள முதல்வராக நடந்து கொள்ளவில்லை.

    Advertisement

    தீயசக்தி முதல்வர் விஜய்

    இன்று ஒரு தீயசக்தி முதல்வராக உள்ளார். தீய சக்தி முதல்வராக விஜய் உள்ளார். தமிழ்நாட்டில் பொறுப்பற்ற, தான்தோன்றித்தனமாக, மக்கள் மீது அக்கறையற்ற அரசாங்கம் நடந்து வருகிறது. ஆட்சியாளர்கள் கற்பனையிலேயே திரிந்து கொண்டிருக்கின்றனர். இது மக்கள் ஆதரவு முழுமையாக இல்லாத அரசு. இந்தச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று விஜய் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வராக நான் இருந்திருந்தால் இந்நேரம் ராஜினாமா பண்ணியிருப்பேன்.

    மந்திரியாக இருக்கிறவர்கள் ஒருவர் கூட அறிவார்ந்தவர்களாக இல்லை. அரசியல் அனுபவம் இல்லாதவர்கள் அமைச்சர்களாக உள்ளனர். பணம் டீல் செய்யக்கூடிய மார்ட்டின் குடும்பத்தால் இந்த அரசாங்கம் ஆட்டி வைக்கப்படுகிறது. பாலியல் வன்கொடுமையைத் தட்டி கேட்க ஜோசப் விஜய் அரசுக்கு துப்பில்லை. தமிழ்நாட்டின் துரதிருஷ்டம் இதுபோன்ற சர்க்கார் அமைந்துள்ளது. தவெக ஆட்சி தமிழகத்துக்கு ஒரு துரதிருஷ்டம்.

    Advertisement

    திருப்பரங்குன்றம் தீபம்

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது. கர்நாடக அரசு கற்பனை செய்துகொண்டு பேசுவதை நாம் ஏன் தடுக்க வேண்டும்?

    திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிமன்றம் மீண்டும் தீர்ப்பளித்து, அதை ஏற்ற முடியாது என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினால், அதன்பின்னர் நான் இதற்குப் பதில் சொல்கிறேன்.

    சிறுபான்மையின மாணவர்கள் மத அடையாளங்கள் இல்லாமல் பள்ளிக்கு வர வேண்டும் என்று கூற, தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு தைரியம் இருக்கிறதா?" என்றெல்லாம் காரசாரமாக கேள்வி எழுப்பினார்.

    English Summary

    Running a Government with 'Small Timers'? H. Raja Tears Into Vijay’s TVK Rule, Annamalai Gets a Message Too