S Janaki: காற்றில் எந்தன் கீதம்.. காவியக் குரலால் ரசிகர்களை கட்டி போட்டவர்! ஜானகியின் மறக்க முடியாத டாப் 10 பாடல்கள்

  • சென்னை: பழம்பெரும், புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஜானகி வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். 17 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி 80ஸ், 90ஸ், 2கே கிட்ஸ் என தலைமுறைகளை தாண்டி இசை ரசிகர்களின் மனங்களை கட்டிப்போட்டது இவரது பாடல்கள். காலத்திலும் அழியாத ஜானகியின் டாப் 10 பாடல்களை இங்கு காணலாம்.

    Advertisement

    இளையராஜாவுடன் "செந்தூரப் பூவே செந்தூரப் பூவே" என 80ஸ் கிட்ஸ்களிடம் ஆரம்பித்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தளபதி படத்தில், "சின்னத் தாயவள்.." என 90-ஸ் கிட்ஸ்களையும், தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில், "அம்மா அம்மா.. நீ எங்க அம்மா.." என 2 கே கிட்ஸ்களின் இதயங்களையும் தன் பாடலால் கவர்ந்த ஜானகி இன்று மறைந்தாலும் தன் பாடல்கள் மூலம் எப்போது வாழ்ந்துகொண்டே இருப்பார்.

    Advertisement

    தேசிய விருது வென்றவர்

    பழம்பெரும், புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 88. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 48,000-க்கும் அதிகமான பாடல்களை பாடி கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களை வசப்படுத்தியவர். கடந்த சில நாட்களாகவே எந்த ஒரு நிகழ்விலும் பங்கேற்காமல் இருந்து வந்தார்.

    மைசூரில் ஜானகி வசித்து வந்த நிலையில், இன்று மாலை திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது 19 வயதில் சினிமாவுக்குள் நுழைந்த இவர் இசைஞானி இளையராஜா, எம்எஸ் விஸ்வநாதன் என முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்துள்ளார். குறிப்பாக 16 வயதினிலே படத்தில் செந்தூரப்பூவே என்ற பாடலுக்கு தேசிய விருதை வென்றார்.

    Advertisement

    செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே

    இதே போன்று கமல்ஹாசனின் தேவர் மகன் படத்தில் இஞ்சி இடுப்பழகி பாடல் உள்பட 4 பாடல்களுக்கு சிறந்த பின்னணி பாடகி என்ற தேசிய விருதை வென்றிருக்கிறார். இன்று ஜானகி மறைந்து இருப்பது அவரது ரசிகர்களை மாளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. ஜானகி நம்மை விட்டு மறைந்தாலும், அவர் பாடிய பாடல்கள் பலவற்றின் மூலமாக என்றும் நீங்காமல் இருப்பார். அவர் பாடிய டாப் 10 பாடல்களை இங்கு பார்க்கலாம்.

    இளையராஜா இசையில் செந்தூரப் பூவே செந்தூரப் பூவே என ஜானகி பாடிய பாடல் அப்போது பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்தது. அவரது மெல்லிசை குரலால் பாடிய பாடல் இசை ரசிகர்களை கட்டிப் போட்டது என்றே சொல்லலாம். இந்த பாடலுக்காக முதல் முறையாக ஜானகிக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.

    Advertisement

    ஊரு சனம் தூங்கிடுச்சு.. மச்சானப் பார்த்தீங்களா

    "ஊரு சனம் தூங்கிடுச்சு.. ஊதக் காத்தும் அடிச்சுடுச்சு.. பாவி மனம் தூங்கலயே.." அதுவும் ஏனோ புரியல.. என்ற பாடல் இப்போதும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிறது. அழகு மலர் ஆட.. அபினயங்கள் பாட என்ற ஜானகியில் குரலில் வெளிவந்த இந்த பாடலும் என்றைக்கும் ரசிகர்கள் மனங்களை விட்டு நீங்காது.. இன்றும் இரவு நேர பயணங்களில் இந்த பாடல்கள் தவறாமல் இடம்பெறும். "காற்றில் எந்தன் கீதம்" என காவியக் குரலால் ரசிகர்களின் மனதை மயக்கிவர்.

    இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில், "மச்சானப் பார்த்தீங்களா" என்ற பாடலை பாடியவர் உங்க ஜானகி தான். 1976-இல் வெளியான இந்த படத்தில் இளையராஜாவின் எளிமையான மெட்டு, ஜானகியின் குரல் பாடலை பசுமையாக மாற்றியிருக்கும். இப்போதும் கிராமங்கள் தோறும் கச்சேரிகளில் பாடக்கூடிய பாடல்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.

    Advertisement

    இஞ்சி இடுப்பழகி..

    ஜானி படத்தில் இடம்பெற்ற, "காற்றில் எந்தன் கீதம்" என்ற பாடல் எப்போதும் ரசிகர்களை விட்டு நீங்காது. சூப்பர் ஸ்டார் ரஜினி - ஸ்ரீதேவியின் இந்த பாடலுக்கு ஜானகி - இளையராஜா ஜோடி உயிர் கொடுத்து இருக்கும்.

    இதே போன்று இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தில் இடம்பெற்ற "சின்னத் தாயவள்" என தொடங்கும் இந்த பாடல் எப்போதும் பேவரட் தான். ரஜினிகாந்த், இளையராஜா, வாலி கூட்டணியில் உருவான இந்த பாடல் இப்போது ரசிகர்கள் மனதை கரைக்கும்.

    காதல் ஓவியம் படத்தில் இடம்பெற்ற "நாதம் என் ஜீவனே" என்ற பாடலும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காது. கமல்ஹாசனின் தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற "இஞ்சி இடுப்பழகி" பாடல் கிராமங்கள் தோறும் ஹிட் அடித்தது. ரேவதியின் நடிப்பில் ஜானகி பாடிய இந்த பாடலுக்கு மற்றொரு தேசிய விருது கிடைத்தது.

    Advertisement

    "ஓஹோ மேகம் வந்ததோ"

    வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் இடம்பெற்ற "சிப்பி இருக்குது" என்ற பாடலும் ஜானகிக்கு தனித்துவமானது. கமல்ஹாசன் - ஸ்ரீதேவி இடையேயான உரையாடலாக இடம்பெற்றிருக்கும் இந்த பாடலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அவதாரம் படத்தில் இடம்பெற்ற, "தென்றல் வந்து தீண்டும் போது" என்ற பாடலும் ரசிகர்களின் மனதை கட்டிப்போடும். ஜானகியுடன் இணைந்து இந்த பாடலை இளையராஜா பாடியிருப்பார்.

    மவுன ராகம் படத்தில் "ஓஹோ மேகம் வந்ததோ" என்ற பாடல் பெண் கதாநாயகிக்கு என இண்ட்ரோ சாங் கொடுக்கப்பட்டிருக்கும். மழையில் நனைந்துகொண்டே, துள்ளிக்குதித்து ஆடும் இந்த பாட்டிற்கு ஏற்ப குரலால் துள்ளல் கொடுத்து இருப்பார் ஜானகி. தனுசின் வேலையில்லா பட்டதாரி படம் ஹிட் அடிக்க ஜானகி பாடிய ”அம்மா அம்மா நீ எங்க அம்மா” 2கே கிட்ஸ்களின் மனங்களையும் கரைய வைத்தது.

    English Summary

    S Janaki Top 10 Songs: Legendary singer S. Janaki has sung over 40,000 songs in 17 languages. From Senthoora Poove to Amma Amma, her unforgettable voice continues to inspire generations. Here are 10 of her most iconic and timeless songs.