சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் படுதோல்விக்கு அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் முக்கிய காரணம் என்றும், ஆட்சியில் இருந்த திமுகவை விமர்சிப்பதை விட விஜய்யை விமர்சிப்பதையே தனது முழு நேர வேலையாக வைத்து இருந்தார் என்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதற்கு ஒன் இந்தியா நடத்திய ஜென்சி டாக்ஸ் நிகழ்ச்சியில் சாட்டை துரைமுருகன், பதிலடி கொடுத்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 8 சதவீதம் வாக்கு பெற்ற நாம் தமிழரின் வாக்கு சதவீதம் 4 ஆக சரிந்தது. காரைக்குடியில் போட்டியிட்ட சீமானும் டெபாசிட் பறிகொடுத்தார்.
நாம் தமிழர் கட்சியின் இந்த படுதோல்விக்கு அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகனும் முக்கிய காரணம் என்றும், ஆட்சியில் இருந்த திமுகவை விமர்சிப்பதை விட விஜய்யை விமர்சிப்பதையே தனது முழு நேர வேலையாக வைத்து இருந்தார் என்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் ஒன் இந்தியா நடத்திய ஜென்சி டாக்ஸ் நிகழ்ச்சியில் சாட்டை துரைமுருகன், தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். ஜென்சி டாக்ஸ் நிகச்சியில் இளைஞர்கள் எழுப்பிய காரசார கேள்விகளுக்கும் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி தங்கள் பாணியில் அதிரடியாக பதிலளித்தனர். ஜென்சி டாக்ஸ் நிகழ்ச்சியின் முழு வீடியோவை இங்கே கீழே உள்ள ஒன் இந்தியா யூடியூப் சேனலில் காணலாம். சாட்டை துரைமுருகன் கூறியதாவது:- நான் பேசி பேசிதான் ஏற்கனவே இருந்த வாக்கு சதவீதமும் குறைந்துவிட்டதாக கேட்கிறீர்கள். 234 தொகுதிகளில் 108 தொகுதிகளில் தவெக வென்றதற்கும் 8 விழுக்காடு 4 ஆக மாறியதற்கும் நான் காரணம் என்றால், 126 தொகுதிகளில் தவெக தோற்றதற்கு யார் காரணம்? நாங்க எல்லாரும் சேர்ந்து அடித்ததால்தான் 126 தொகுதிகளில் விஜய் தோல்வி அடைந்தார். இல்லை என்றால் 150 தொகுதிகளில் வென்று இருப்பார். தவெக கட்சியின் உண்மைத்தன்மையை மக்களிடம் சொன்னது நாங்கதான். தவெகவை எதிர்த்ததால்தான் அந்த கட்சி அந்தரத்தில் தொங்கியது. இல்லையென்றால் பெரும்பான்மை பெற்று திமிரோடு ஆட்சி அமைத்து இருக்கும். திமிரோடு ஆட்சி அமைத்து இருந்தால், எதையெல்லாம் செய்ய நினைத்ததோ அதையெல்லாம் செய்து தமிழ்நாட்டை இன்னும் குட்டிச்சுவர் ஆக்கியிருக்கும்" என்றார்.ஜென்சி டாக்ஸ் நிகழ்ச்சி
சாட்டை திருமுருகன் பதிலடி