சென்னை: தவெக அரசின் முதலாவது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் பட்ஜெட் அறிவிப்புகளைக் கடுமையாக விமர்சித்து நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் காரசாரமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளைச் சுட்டிக்காட்டி அவர் எழுப்பியுள்ள கேள்விகள் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
தமிழக அரசு வெற்றிகரமாக ரூ.1,50,000 கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளதையும், பெரிய திட்டங்கள் இல்லாத பட்ஜெட்களைத் தாக்கல் செய்ததையும் சுட்டிக்காட்டி தனது விமர்சனத்தைத் தொடங்கிய சாட்டை துரைமுருகன், "இத்தனை கலாம் கடன் வாங்கியது தவறு என்று கூறிவிட்டு இப்போது தவறு இல்லை என்று தவெகவினரே கூறுகிறார்கள். வெற்றிகரமாக கடன் வாங்குவது தப்பில்லை என்று அவர்களே வெற்றிகரமாக ஒப்புக்கொள்கிறார்கள். இந்த நிதிநிலை அறிக்கையில் எவையெல்லாம் விட்டுப்போயின, எவையெல்லாம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய முக்கியமான விஷயம்.." என்று குறிப்பிட்டுள்ளார். தவெக ஆதரவாளர்கள் மற்றும் Virtual Warriors-களுக்கும் புரியும் வகையில் விஜய் பாணியிலேயே கேள்விகளை அடுக்குவதாகத் தெரிவித்து, விஜய்யின் பிரபல வசன பாணியில் என்ன ஆச்சு, என்ன ஆச்சு, பக்கா மாஸ் முதல்வரே என்ன ஆச்சு? என்று கூறி கேள்விகளை சாட்டை அடுக்கி உள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக சார்பில் அளிக்கப்பட்ட பல முக்கிய வாக்குறுதிகளைப் பட்டியலிட்ட அவர், அவை அனைத்தும் பட்ஜெட்டில் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். மகளிர் உதவித்தொகை & சிலிண்டர்: அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்ற அறிவிப்பு மற்றும் அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் வீட்டிற்கு 6 இலவச எல்.பி.ஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது என கேள்வி எழுப்பி உள்ளார். வேலையில்லா பட்டதாரிகள்: வேலையற்ற பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் தற்போதைய நிலை என்ன என்று கேள்வி எழுப்பினார். கல்வி மற்றும் நெசவாளர் நலன்: 12-ஆம் வகுப்பு, ஐஐடி மற்றும் டிப்ளோமா மாணவர்களுக்கு ரூ.2,000 நிதி, பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பிணையில்லா கல்விக்கடன், நெசவாளர் குடும்பங்களுக்குரூ.30,000 நிதி உதவி ஆகியவை பட்ஜெட்டில் விடுபட்டுள்ளதாக விமர்சனம் செய்துள்ளார்.. முதியோர் உதவித்தொகை ரூ.3,000, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.3,000, மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.4,000 ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் கண்டுகொள்ளப்படவில்லை என்று அவர் விமர்சனம் செய்தார். மேலும், தற்காலிகப் பணியாளர்களை நிரந்தரம் செய்வதாகக் கூறிய வாக்குறுதி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், காவலர்களுக்கான செலவுப்படி ரூ.1,000 மற்றும் ஓய்வூதியம் ரூ.25,000 போன்ற வாக்குறுதிகளின் நிலை குறித்து அரசு பதிலளிக்க வேண்டும் என்றார். உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.7,000, மீனவர்களுக்குத் தடைக்கால நிவாரணமாக ரூ.20,000 மற்றும் வழக்கறிஞர்களுக்கான நலநிதி ரூ.3,000 ஆகியவை எங்கே போனது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பரந்தூர் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது அது குறித்து அமைதி காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம், கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.25,000 ஊட்டச்சத்து உதவித்தொகை, இலவச சானிட்டரி நாப்கின் திட்டம் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு, கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு ₹8,000 கல்வி வாழ்வு நிதி, அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.2.50 லட்சம் காப்பீடு, குறைந்த விலையில் மருந்துகள், மாதம் ஒருமுறை மின்சாரக் கட்டணக் கணக்கீடு, 150 நாள் ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் சொத்து வரி குறைப்பு போன்ற எண்ணற்ற வாக்குறுதிகள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு திட்டமாக எடுத்து என்ன ஆச்சு என்று தனியாகக் கேட்டுக்கொண்டிருப்பதை விட, தவெக அரசு தாக்கல் செய்துள்ள இந்த ஒட்டுமொத்த பட்ஜெட்டுமே காத்தோடு காத்தாக பறந்துவிட்டது என்று சாட்டை துரைமுருகன் தனது பாணியில் காகிதத்தைப் பறக்கவிட்டு விமர்சனத்தை முடித்துள்ளார். தவெகவின் முதல் நிதிநிலை அறிக்கை தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு அரசு தரப்பில் என்ன பதில் வரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.ரூ.1.5 லட்சம் கோடி கடனும் நிறைவேறாத வாக்குறுதிகளும்
மகளிர் மற்றும் இளைஞர் நல வாக்குறுதிகள் எங்கே?
சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்கள் நலன்
பரந்தூர் விமான நிலையம்
காத்தோடு காத்தா பறந்தாச்சு!