நடிகை குறித்து இரட்டை அர்த்த பேச்சு! உதயநிதி கைது! பதறியடித்து வந்த சபரீசன்!

  • சென்னை: பெண்கள் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசிய விவகாரத்தில் உதயநிதியை கைது செய்ய வந்த போலீஸாரிடம் சபரீசன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

    Advertisement

    சென்னை நீலாங்கரையில் உதயநிதி ஸ்டாலின் வீடு உள்ளது. இங்கு தனது மனைவி கிருத்திகா, மகள், மகனுடன் உதயநிதி வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தவெகவை கண்டித்து திமுக சார்பில் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    Advertisement

    அந்த ஆர்ப்பாட்டத்தின் போது தொண்டர்கள் ஏதோ சொல்ல, அதற்கு உதயநிதி இரட்டை அர்த்தத்தில் முதல்வர் விஜய்யையும் பெண்களையும் ஆபாசமாக குறிப்பிடும் வார்த்தையை பயன்படுத்தினார்.

    இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தவெக மகளிர் அமைப்பினர் தஞ்சை காவல் நிலையத்தில் உதயநிதி மீது புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீஸார் உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    BNS

    196- பொது அமைதியை கெடுத்தல்

    192- கலவரத்தை தூண்டும் வகையில் ஆத்திரம்

    79- பெண்களின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்துதல்

    352- வேண்டுமென்றே ஒருவரே அவமதித்தல்

    Advertisement

    296(b) ஆபாசமாக பேசுதல்

    351(2)- மிரட்டல்

    BNS 61- குற்றவியல் சதி

    பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு (4)

    தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67

    ஆகிய 9 பிரிவுகளின் கீழ் உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் உதயநிதியின் நீலாங்கரை வீட்டை சுற்றி காலை முதலே போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதை அறிந்த திமுகவினர் அவரது வீட்டுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அவர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து உதயநிதியின் வீட்டிற்கு முன்னாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், கே.என்.நேரு, சேகர்பாபு உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். உதயநிதியை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டிருந்த நிலையில் அவரது வழக்கறிஞர் வரட்டும், அது வரை நேரம் கொடுங்கள் என கிருத்திகாவும் மா.சுப்பிரமணியனும் போலீஸாரிடம் பேசி வருகிறார்கள்.

    Advertisement

    இந்த நிலையில் ஸ்டாலினின் மருமகனும், உதயநிதியின் தங்கை கணவருமான சபரீசன், நீலாங்கரை வீட்டிற்கு வந்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    அப்போது உதயநிதியை மதியம் 12 மணி வரை கைது செய்யக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக திமுக வழக்கறிஞர் சரவணன் கூறியும் போலீஸார் அவர்கள் கேட்கவில்லை. சபரீசனும் போலீஸிடம் பேசி வருகிறார். எனினும் அவரை கைது செய்து போலீஸ் வாகனத்திலேயே அழைத்துச் சென்றுவிட்டனர்.

    English Summary

    Sabareesan arrived at Udhayanidhi Neelankarai house. Finally the latter was arreested by police.