சென்னை: "நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர் சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் மரணம் அடைந்துள்ளார். அவரை காவல் துறையினர் அடித்தே கொலை செய்துள்ளதாக குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்" என தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சபரிவர்மன் (வயது 35). இவர் அப்பகுதியில் 200 கிராம் குட்கா விற்பனை செய்ததாகக் கூறி அண்மையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்த 9 ஆம் தேதி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டார்.
ஜூலை 12 நள்ளிரவு மாவட்ட சிறையில் இருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் கைதியாக சிறையில் இருந்த சபரிவர்மனை போலீசார் அடித்துக் கொன்றதாக குற்றம்சாட்டி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயம் இருந்ததாக உடற்கூறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, சிறையின் தலைமை வார்டன் ஜெகன், சிறை வார்டன் சிவக்குமார், மற்றொரு வார்டன் சுரேஷ் என்ற திருவிடைநம்பி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல் துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றக் காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சியுற்றேன். கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்டபோது, உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று காவல் துறை தரப்பில் சொல்லப்படுகிறது. இது குறித்து உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல் துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றக் காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சியுற்றேன். கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்டபோது, உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று காவல் துறை தரப்பில் சொல்லப்படுகிறது. காவல் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும். சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக, அவரை கைது செய்த காவல் துறையினர், ஈரோட்டில் குட்கா விற்றதாக கைது செய்யப்பட்ட த.வெ.க. நிர்வாகி அருணை அன்றே சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர். சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, சபரிவர்மனின் மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும். சபரிவர்மனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.