ஆட்டநாயகன் விருதும் வென்றுட்டாரா.. இனி நம்பர் 3 பேட்ஸ்மேன் படிக்கல் தான்.. பாவம் சாய் சுதர்சன்!

  • கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ள நிலையில், இளம் வீரர் தேவ்தத் படிக்கல் ஆட்டநாயகன் விருதினை கைப்பற்றியுள்ளார். முதல் இன்னிங்ஸில் 167 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 44 ரன்களும் விளாசிய தேவ்தத் படிக்கலின் அபார ஆட்டத்தால், தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

    Advertisement

    இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 462 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய இளம் வீரர் தேவ்தத் படிக்கல் 167 ரன்களை விளாசினார். இதன்பின் களமிறங்கிய இலங்கை அணி 284 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

    Advertisement

    இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 193 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி சார்பாக ரிஷப் பண்ட் 66 ரன்களும், படிக்கல் 44 ரன்களும் சேர்த்தனர். இதன்பின் ஆடிய இலங்கை அணி வெறும் 206 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தது. இந்திய அணி தரப்பில் மானவ் சுதார் மொத்தமாக 10 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    இருந்தாலும் இந்திய அணியின் வெற்றிக்கு முதல் இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட ஸ்கோரே முக்கிய காரணம் என்பதால், தேவ்தத் படிக்கல் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் தேவ்தத் படிக்கல் பெறும் முதல் ஆட்டநாயகன் விருது இதுவாகும். இதன் மூலமாக தேவ்தத் படிக்கல் இன்னும் சில டெஸ்ட் தொடர்களில் நம்பர் 3 பேட்ஸ்மேனாகவே விளையாடுவார் என்று தெரிகிறது.

    Advertisement

    இதனால் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு சிக்கல் உருவாகி இருக்கிறது. ஏனென்றால் இலங்கை தொடரில் இருந்து காயம் காரணமாக சாய் சுதர்சன் வெளியேறினார். சாய் சுதர்சன் காயம் அடையாமல் இருந்திருந்தால், படிக்கல் பெஞ்ச் செய்யப்பட்டிருப்பார். தற்போது தேவ்தத் படிக்கல் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றிருக்கிறார்.

    அதேபோல் சாய் சுதர்சன் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியும் இதுவரை ஒரு சதம் கூட அடித்ததில்லை. அதுமட்டுமல்லாமல் ஸ்பின்னர்களுக்கு எதிரான சிறந்த டெக்னிக் சாய் சுதர்சனிடம் இல்லாததும் சிக்கலாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் சுப்மன் கில் மற்றும் கம்பீர் ஆகியோரின் ஆதரவால், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்று வந்தார். தற்போது சாய் சுதர்சன் கம்பேக் கொடுக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    English Summary

    Sai Sudharsan have to wait again for the Indian team chance after Devdutt Padikkal fantastic performance against Srilanka