சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம்

  • சென்னை: தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு சிறைத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே சமயம், சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த கே. சங்கர் குற்றப்புலனாய்வுத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பதவியேற்க உள்ள நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறை டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் அண்மையில் நியமனம் செய்யப்பட்டார். அவர் இன்று தமிழகத்தின் புதிய டிஜிபி (சட்டம் & ஒழுங்கு) பதவியேற்க இருக்கும் நிலையில், சந்திப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    சிறைத்துறை ஏடிஜிபியாக இருந்த கே.சங்கர், குற்ற புலனாய்வுதுறை அமலாக்கப்பிரிவில் கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற பிறகு, நிரந்தர டிஜிபி நியமிக்கப்படாமல் பொறுப்பு அதிகாரிகளே நீடித்து வந்தனர்.

    சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பிறகு தேர்தல் ஆணையத்தால் சந்தீப் ராய் ரத்தோர் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சந்தீப் ராய் ரத்தோரே டிஜிபியாக நீடித்தார். இந்த சூழலில்தான் தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்க உள்ளார்.

    English Summary

    Sandeep Rai Rathore: Tamil Nadu Law and Order DGP Sandeep Rai Rathore has been transferred and appointed as Prison DGP. Additional DGP K. Shankar has been posted as CBCID ADGP. The reshuffle comes ahead of Mahesh Kumar Aggarwal assuming charge as the new DGP.