எம்எல்ஏக்களுக்கு கார்.. சிஎம் ஆபிஸுக்கு 6 கோடி! தூய்மை பணியாளர்களுக்கு காசில்லையா? கொதிக்கும் மக்கள்

  • சென்னை: பணி நிரந்தரம், சம்பள உயர்வு, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது அது தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் எம்எல்ஏக்களுக்கு கார், முதலமைச்சர் அலுவலகத்திற்கு 6 கோடி என செலவு செய்யும் விஜய் அரசு தூய்மை பணியாளர்களது கோரிக்கையை மட்டும் செயல்படுத்த மறுப்பது ஏன் என பொதுமக்கள் அதிரடியாக கேள்வி எழுப்பி உள்ளனர்.

    Advertisement

    தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள் போராடி வருகின்றனர். பல ஆண்டுகளாக பணியாற்றியும் பணி நிரந்தரம், சம்பள உயர்வு, மகப்பேறு விடுப்பு, உணவு படி உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என தொடர்ந்து அவர்கள் போராடி வருகின்றனர்.

    Advertisement

    கடந்த ஆட்சியில் இந்த போராட்டம் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், ஆட்சி மாறியும் காட்சி மாறாத கதையாக தவெக ஆட்சியிலும் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி உழைப்போர் உரிமை இயக்கத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 16-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. அப்போது ரிப்பன் வளாகத்தில் போராட்டம் நடத்தியவர்களுடன் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து இந்த போராட்டமானது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

    Advertisement

    இந்த நிலையில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் குறித்து பொதுமக்களின் கருத்து குறித்து அறிந்து கொள்வதற்காக ஒன் இந்திய தமிழ் களத்தில் இறங்கியது. சென்னையின் பல்வேறு பகுதிகளை தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் என பலர கருத்து கேட்கப்பட்டது. அனைவருமே ஒரு சேர தமிழக வெற்றிக்கழக அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

    ஆட்சிக்கு வந்தால் நாங்கள் அதை செய்வோம் இதை செய்வோம் என சொல்லிவிட்டு தற்போது எதுவுமே செய்யாமல் இருப்பதா என கேள்வி எழுப்பும் மக்கள், எம்எல்ஏக்களுக்கு கார், முதலமைச்சர் அமரும் ஒற்றை அலுவலகத்திற்கு கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கீடு என அரசு பணத்தை செலவழித்து வரும் விஜய் அரசு தூய்மை பணியாளர்களுக்கு மட்டும் ஏன் ஒரவஞ்சனை காட்டுகிறது என கேள்வி எழுப்புகின்றனர்.

    Advertisement

    அது மட்டும் அல்லாமல் இலவச பேருந்து பயணம், 6 சிலிண்டர், 2500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை உயர்வு உள்ளிட்ட எந்த கோரிக்கையும் விஜய் அரசு செயல்படுத்தவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்களின் முழு பேட்டியை இந்த லிங்கில் காணலாம்..

    English Summary

    Sanitation workers question Vijay government spending on MLAs and the CM office while their demands for permanent jobs and higher wages remain unresolved.