தலைவா.. ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2' படத்திற்காக மொத்த தியேட்டரையும் ‘புக்' செய்த சஞ்சு சாம்சன்

  • சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்னாக இருக்கும் சஞ்சு சாம்சன், நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். இந்நிலையில் தான் மொத்த தியேட்டரையும் 'புக்' செய்த சஞ்சு சாம்சன் தனது மனைவி, குடும்பத்தினர், நண்பர்கள், கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்களுடன் சேர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள 'ஜெயிலர் -2' திரைப்படத்தை பார்த்துள்ளார்.

    Advertisement

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் சஞ்சு சாம்சன். இவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். கேரளாவை சேர்ந்த இவருக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக அவர் தற்போது விளையாடி வரும் நிலையில் அவருக்கான ரசிகர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் இன்னும் அதிகரித்துள்ளது.

    Advertisement

    சஞ்சு சாம்சன் நடிகர் ரஜினிகாந்த்தின் தீவிரமான ரசிகர்கள். இதனை பல இண்டர்வியூக்களில் சஞ்சு சாம்சன் வெளிப்படுத்தி உள்ளார். அதுமட்டுமின்றி ரஜினிகாந்த்தின் ஒவ்வொரு படத்தையும் மிஸ் செய்யாமல் தியேட்டரில் சென்று பார்ப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

    இந்நிலையில் தான் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி உள்ள 'ஜெயிலர் -2' திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடி வருகிறது. கடந்த 15ம் தேதி இந்த திரைப்படம் வெளியான நிலையில் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இதற்கிடையே தான் சஞ்சு சாம்சன் மொத்த தியேட்டரையும் 'புக்' செய்து 'ஜெயிலர் -2' திரைப்படத்தை ரசித்துள்ளார். சஞ்சு சாம்சன் தனது மனைவி, குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தமிழ் தெரிந்த கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்களை அழைத்து சென்று ரஜினிகாந்தின் 'ஜெயிலர் -2' திரைப்படத்தை ரசித்துள்ளார்.

    Advertisement

    முன்னதாக இதுபற்றி சஞ்சு சாம்சன், ''எனக்கு ரஜினி சார் படங்களை பார்ப்பது ரொம்ப பிடிக்கும். அவருடைய அடுத்த படத்திற்காக நான் எப்போதும் ஆவலுடன் காத்திருப்பேன். இப்போது ஒருநாள் தாமதமாக 'ஜெயிலர் 2' திரைப்படத்தை பார்க்கிறேன். முடிந்தவரை அவருடைய எல்லா படங்களையும் பார்க்க முயற்சிப்பேன்.

    நேற்று டெல்லியில் ஒரு நிகழ்ச்சி இருந்ததால் என்னால் படத்தை பார்க்க முடியவில்லை. ஆனால் இன்று அதிர்ஷ்டவசமாக மொத்த தியேட்டரையும் என்னால் முன்பதிவு செய்ய முடிந்தது. என் நண்பர்களையும் அழைத்திருக்கிறன். என் மனைவியும் என்னுடன் வந்திருக்கிறார். ரஜினி சாரை பெரிய திரையில் பார்ப்பதில் நான் உற்சாகமாக இருக்கிறேன்'' என்றார்.

    English Summary

    Indian cricket team wicketkeeper-batter Sanju Samson is a die-hard fan of actor Rajinikanth. Recently, he booked an entire movie theatre to watch ‘Jailer'-starring Rajinikanth-along with his wife, family members, friends, fellow cricketers, and coaches.