சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேத்தி திருமணம் நேற்று சென்னையில் நடைபெற்றது. வைதீக முறையில் சமஸ்கிருத மந்திரங்கள் முழங்க இந்த திருமண வைபவம் நடைபெற்ற நிலையில், திராவிட இயக்க சிந்தனையாளர்கள் மத்தியில் இது விவாதங்களை கிளப்பியுள்ளது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், வேலூர் லோக்சபா தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த் - சங்கீதா தம்பதியரின் மகளுமான செந்தாமரைக்கும், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவி - தீபா தம்பதியரின் மகன் தீபக் ரவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலூர் காட்பாடியில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், நேற்று திருமணம் நடைபெற்றது. மணமக்கள் அணிந்திருந்த ஆபரணங்களும் திருமணத்தின் பிரம்மாண்டமும் பேசப்பட்ட நிலையில், வைதீக முறையில் திருமணம் நடைபெற்றது அரசியல் ரீதியாகவும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இவ்வளவு பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தில், அரசியல் வட்டாரத்தில் வேறு ஒரு விவாதமும் எழுந்துள்ளது.. திமுக தலைவர்களின் குடும்பங்களில் வழக்கமாக சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெறும் நிலையில், செந்தாமரை - தீபக் ரவி திருமணம் ஐயர் மற்றும் சமஸ்கிருத மந்திரங்கள் ஓத வைதீக முறைப்படி நடைபெற்றது. இது குறித்துதான் விவாதங்கள் தற்போது கிளம்பியுள்ளன. திராவிட சித்தாந்தத்தில் ஊறிப்போன கட்சியாக அறியப்படும் திமுகவில், அக்கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கக்கூடிய துரைமுருகனின் வீட்டு திருமண நிகழ்வே வைதீக முறையில் நடைபெற்று இருப்பது தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாக வலைத்தளங்களில் திராவிட இயக்க ஆதரவாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், திராவிட இயக்க தமிழர் பேரவையின் நிறுவனரான சுப. வீரபாண்டியனும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். சுப வீரபாண்டியன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:- என் பெருமதிப்பிற்குரிய, என்னிடம் பேரன்பு காட்டும் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர், அண்ணன் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் பார்ப்பனர்களின் சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டு, இப்போதும் வலிக்கிறது என் இதயம்!" என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, திமுக முன்னாள் எம்.பி டாக்டர் செந்தில்குமாரும் இது தொடர்பாக தனது கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். அவர் கூறும் போது, "திருமண வீடியோவை ஷேர் செய்து அவர் வெளியிட்ட பதிவில், "மேடைகள் தோறும் சுயமரியாதை திருமணங்களை பிரகடனப்படுத்திய கொள்கை பிடிப்புள்ள கழகத்தில் அதனை கடைப்பிடிக்க கூடிய வாய்ப்பினை தவறவிட்டதில் தனிபட்ட முறையில் உடன்படவில்லை" என்று கூறியிருந்தார்.வைதீக முறைப்படி திருமணம்
ரூ.100 கோடி நகை, ரூ.25,000 பத்திரிகை, வைதீக திருமணம்.. துரைமுருகன் பேத்தி கல்யாணத்தில் ஏன் சர்ச்சை?
சுப வீரபாண்டியன் ஆதங்கம்
பொதுவாழ்வின் எடுத்துக்காட்டு..எம்ஜிஆர் ஆட்சிக்கு சிம்மசொப்பனம் துரைமுருகன்! புகழ்ந்த முக ஸ்டாலின்!
திமுக முன்னாள் எம்பி செந்தில்குமார்