சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவரும் மத்திய அமைச்சருமான எல்.முருகன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதனிடையே வரும் காலங்களில் மத்திய அமைச்சரவையில் மாற்றத்தோடு தமிழக பாஜகவிலும் தலைவர் மாற்றம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. தற்போது விஜய் - உதயநிதி என சினிமா துறை சார்ந்த பிரபலங்களே தமிழக அரசியலில் உச்சத்தில் இருக்கும் நிலையில், பாஜகவிலும் அதுபோன்ற ஒரு முகத்தை முன்னிறுத்த டெல்லி தலைமை முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் தமிழக பாஜக தலைவராக சரத்குமார் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்கின்றனர் கமலாலய வட்டாரத்தினர்.
தனது மத்திய இணை அமைச்சர் பதவியையும் ராஜ்யசபா எம்பி பதவியும் ராஜினாமா செய்துவிட்டு, கட்சி தொண்டர்களுடன் இணைந்து கட்சியை விரிவுபடுத்த விரும்புவதாக திடீரென அறிவித்திருக்கிறார் பாஜகவின் எல்.முருகன்.
இளம் வயதியிலிருந்தே பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகளில் பணியாற்றி வந்த அவர், 2011 சட்டமன்ற தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தொடர்ந்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவராக பதவி வகித்தார். பின்னர் 2020ல் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். 2021 வரை அந்த பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 2021 தமிழக சட்டசபை தேர்தலில் தாராபுரத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு அதே ஆண்டில் மத்திய அமைச்சராக பதவி ஏற்றார். இதற்கிடையே தமிழக பாஜகவில் புதிதாக இணைந்த அண்ணாமலைக்கு துணைத் தலைவர் பதவியும்ந், பின்னர் மாநில தலைவர் பதவியும் தரப்பட்டதுந்.ந்ந்ந்ந் மாநில தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு இணை அமைச்சராக பதவி ஏற்றி இருந்தார். இந்த நிலையில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் எல்.முருகன். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கட்சியை வலுப்படுத்துவதில் முழு நேரமாக ஈடுபட ஏதுவாக மத்திய இணை அமைச்சர் பொறுப்பில் இருந்தும் ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார். மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருக்கும் இடையில் எல்.முருகன் தானாகவே முன்வந்து பதவியை ராஜினாமா செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க மத்திய அமைச்சராவையிலும், தமிழக தலைமையிலும் மாற்றம் ஏற்படலாம் என சொல்கின்றனர் பாஜகவின. அதற்கு சில காரணங்களும் உள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட முக்கிய தலைகள் அனைவரும் தோல்வியை சந்தித்தனர். குறிப்பாக நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தர்ராஜன் என பலரும் தோல்வியை சந்தித்த நிலையில் பாஜக வெற்றி பெற தவறியதற்கு மாநில தலைமையும் ஒரு காரணம் என்ன சொல்லப்படுகிறது. இதனால் தற்போது மாநில தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் மாற்றப்படலாம் என்கின்றனர். மற்றொருபுறம் ஏற்கனவே தனது பதவியை ராஜினாமா செய்த எல். முருகன் மாநில தலைவராக நியமனம் செய்யப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கின்றார். ஆனால், ஏற்கனவே தலைவர்களாக இருந்தவர்களை மீண்டும் தலைவராக நியமிக்க பாஜக தலைமை விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. தற்போது புதிய தலைவர் பட்டியலில் வானதி சீனிவாசனின் பெயர் பலமாக அடிபடுகிறது. தற்போதைக்கு வானதி ஆந்திராவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழக தலைவராக அவர் நியமிக்கப்படுவது சற்று சிரமம் தான் என அவரது ஆதரவாளர்களை சொல்லி வருகின்றனர். தற்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கும் விஜய், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதி என தமிழ்நாடு அரசியல், சினிமாத்துறை சார்ந்த பிரபலங்களையே சுற்றி வரும் நிலையில் மக்களுக்கு ஏற்கனவே நன்கு தெரிந்த முகமாக சரத்குமார் இருக்கிறார். எனவே சரத்குமாரை மாநில தலைவராக கொண்டு வந்தால் ஓரளவு தமிழகம் முழுவதும் பாஜக தலைவரின் பெயர் தெரிய வரும் அது ஒரு பிளஸ் பாயிண்டாக கூட அமையலாம். ஏற்கனவே கட்சியில் சேர்ந்து பல ஆண்டுகளாகியும் சரத்குமாருக்கு பதவி எதுவும் வழங்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருக்கிறார். இந்த நிலையில் தலைவர் பதவிக்காகத்தான் இத்தனை நாள் சரத்குமார் காக்க வைக்கப்பட்டார் எனவும், தற்போதைக்கு தமிழக பாஜக தலைவர் ரேசில் அவர் தான் முன்னிலையில் இருக்கிறார். அவரே தலைவராக நியமனம் செய்யப்பட வாய்ப்பு அதிகம் என்கின்றனர் கமலாலய வட்டாரத்தினர்.தமிழக பாஜக
எல்.முருகன்
அமைச்சரவையில் மாற்றம்
நயினார் நாகேந்திரன்
வானதி சீனிவாசன்
சரத்குமார்
தமிழக பாஜக தலைவர்