சரத்குமார் பேச்செல்லாம் எடுபடுமா? என்னா பெரிய பச்சைக்குத்திக்கிறது? பழைய தோஸ்து எர்ணாவூர் நாராயணன்

  • சென்னை: நாடு முழுவதும் முதல்வர் விஜய் குறித்து பரபரப்பாக பேசப்படும் நேரத்தில் சரத்குமார் பேச்செல்லாம் எடுபடுமா என அவரது முன்னாள் ஆதரவாளரும் சமத்துவ மக்கள் கழகத் தலைவருமான எர்ணாவூர் நாராயணன் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, என் பெயரை சொன்னால் கூட பச்சைக் குத்தி கொள்வார்கள். காசு கொடுத்து சரத்குமார் பச்சை குத்த வைத்திப்பார். நாடு முழுவதும் முதல்வர் விஜய் குறித்த பேச்சு இருக்கும் நிலையில் சரத்குமாரின் பேச்செல்லாம் எடுபடுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சி தொடங்கியதும் அவரது ரசிகரான எர்ணாவூர் நாராயணன் அந்த கட்சியில் இணைந்து சரத்குமாருடன் செயல்பட்டு வந்தார். கரு நாகராஜன் கூட சரத்குமார் கட்சியில் இருந்தவர்தான். ஒரு கட்டத்தில் சமக-வை சரத்குமார், மனைவி ராதிகாவிடம் கேட்டு பாஜகவில் இணைத்ததாக தெரிவித்திருந்தார்.

    சரத்குமார் பாஜகவில் சமக-வை இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முக்கிய நிர்வாகிகள் அவருடன் இருந்து விலகி விட்டனர். அதில் எர்ணாவூர் நாராயணன் என்பவர் சமத்துவ மக்கள் கழகம் என்ற பெயரில் ஒரு தனி கட்சியை தொடங்கியுள்ளார்.

    அண்மையில் சரத்குமாரின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது. இந்த விழாவில் சரத்குமாருக்காக பணியாற்றிய நபர்களுக்கு சென்னை எழும்பூரில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    Advertisement

    இதில் சரத்குமார் பேசுகையில், "நாட்டாமை குடும்பம்" என பச்சை குத்திக் கொள்வது நமது அடையாளம். நமது குடும்ப அடையாளமாக பச்சைக் குத்திக் கொள்ள வேண்டும் என எண்ணம் தோன்றியது.

    நமது குடும்பத்தில் உள்ளவர்கள் என்னை சந்திக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு கிரீன் கார்டு போன்ற வழங்கலாம் என நினைத்தேன். ஆனால் பச்சைக் குத்தி கொண்டால் நம் குடும்பமாகிவிடும். நாட்டாமை குடும்பம் என கையில் பச்சை குத்தியிருந்தால் என்னை எளிதில் நேரடியாக சந்திக்கலாம்.

    இது யாரையும் கட்டாயப்படுத்தும் நோக்கில் இல்லை. விரும்பியவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றுக் குத்திக் கொள்ளலாம். நானும் பச்சைக் குத்திக் கொள்வேன். ஆனால் இப்போது இல்லை, படப்பிடிப்புகள் முடிந்ததும் குத்திக் கொள்வேன் என சரத்குமார் தெரிவித்தார்.

    English Summary

    Ernavur Narayanan says that Sarathkumar unlikely to get attention as country is praising CM Vijay.