சபாஷ் போலீஸ்! சிகப்பு சூட்கேஸ்..பெண் சடலம்! துப்பு துலக்க உதவிய சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை பை! எப்படி?

  • சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவப்பு நிற சூட்கேஸுக்குள் துண்டிக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்கொலை சம்பவத்தில் முக்கிய தடயமாக பிரபலமான 'சரவணா ஸ்டோர்' துணிக்கடையின் ப்ளாஸ்டிக் பை கைப்பற்றப்பட்ட நிலையில், கொலை சென்னையில் நடந்தது தெரியவந்தது. இல்லையெனில் ஆக்ராவைச் சுற்றியே இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப்பெட்டியில் சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கிடந்தது. அதனை போலீஸார் சோதனையிட்டபோது, தலை, கை, கால்கள் இல்லாத நிலையில் ஆண் சடலம் ஒன்று இருந்தது தெரியவந்தது.

    Advertisement

    இதுகுறித்து ஆக்ரா போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த சிவப்பு நிற சூட்கேஸ் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது இளம் பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் சிவப்பு நிற சூட்கேஸுடன் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்ததும், பின்னர் அந்த சூட்கேஸ் இல்லாமல் இருவரும் அங்கிருந்து வெளியேறியதும் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இருவரும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறநகர் ரயில் மூலம் கூடுவாஞ்சேரி பகுதிக்குச் சென்றதும், அங்கிருந்து ஆட்டோவில் வேறு பகுதிக்குச் சென்றதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

    Advertisement

    சிசிடிவி காட்சிகள் மற்றும் கிடைத்த பிற தடயங்களின் அடிப்படையில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது அந்த இளைஞரும் இளம்பெண்ணும் கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கூடுவாஞ்சேரி போலீஸாரும், தமிழ்நாடு ரயில்வே போலீஸாரும் இணைந்து அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் பெண்ணின் உடல் பாகங்கள் மற்றும் எலும்பு ஆகியவற்றை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி டபராவில் போட்டு வேக வைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த கொலையை செய்தது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணிக் உத்தி லஸ்கர் என்பதும் அதற்கு உடந்தையாக அவரது மனைவியான பகாபதி மாஜி இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி மணிப்பூர் மாநிலம் காஷிபூர் பகுதியில் பதுங்கி இருந்தபோது அவர்களை கைது செய்தனர்.

    Advertisement

    தொடர்ந்து அவர்களிடம் பெறப்பட்ட பகீர் வாக்குமூலம் நிலைகுலைய வைத்தது. கொலையுண்ட ஒடிசா பெண்ணிடம் தகாத உறவில் இருந்து கர்ப்பமாக்கியதாகவும், அதை கலைக்க சொன்ன போது மறுத்து திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தியதால், கணவன் மாணிக் உத்தீனும் அவரது மனைவி நிஷாவும் சேர்ந்து இக்கொடூரத்தை நிகழ்த்தியதாகவும், கொலைக்கு பின் கழுத்தை வெட்டி பிரியாணி அண்டாவில் ரத்தம் பிடித்ததாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

    இந்த நிலையில் கொலைக்கு முக்கிய தடயமாக இருந்தது ஒரு துணிக்கடையின் பை என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. அதாவது கொலையான பெண்ணின் உடல் இருந்த சூட்கேசில் ஒரு பிளாஸ்டிக் பை இருந்தது. அதில் சென்னையின் பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் கடையில் பெறப்பட்ட பை என்பது தெரிய வந்தது. இதை அடுத்து இந்த கொலை சென்னையில் நடந்திருக்கலாம் என்ற அடிப்படையில் ஆக்ரா போலீசார் சென்னை போலீசாரை தொடர்பு கொண்டு உதவி கேட்டனர்.

    Advertisement

    இதை அடுத்துதான் ஆக்ரா ரயில் புறப்பட்ட நேரத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது ஆகஸ்ட் 3ஆம் தேதி ஒரு ஆணும் பெண்ணும் அதே சிவப்பு நிற சூட்கேசடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றது பதிவாகி இருந்தது. இதன் பின்னர் அவர்கள் பார்க் ரயில் நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து புறநகர் ரயில் ஏறி தாம்பரம் நோக்கி சென்ற சிசிடிவி காட்சிகளும் கைப்பற்றப்பட்டன.

    இந்த வழக்கில் மட்டும் சென்னை போலீசார், சென்னை சென்ட்ரல், பார்க், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 350-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து இறுதியாக அவர்கள் கூடுவாஞ்சேரி பகுதிக்கு சென்றது தெரியவந்தது. அதன் பின்னர் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து வீட்டுக்குள் சென்று பாத்திரத்தில் வேக வைக்கப்பட்ட உடல் பாகங்களை கைப்பற்றியதோடு கொலை செய்யப்பட்ட பெண் ஒடிசாவை சேர்ந்த ஹயதுல் நிஷா என்பதனையும் கண்டறிந்தனர். இப்படி சரவணா ஸ்டோர்ஸ் துணிப்பை தான் ஆக்ரா கொலை வழக்கின் முக்கிய தடையமாக இருந்தது தற்போது தெரியவந்து.

    English Summary

    A Saravana Stores plastic bag reportedly helped police trace the shocking red suitcase murder case from Agra to Chennai.