சத்யபாமா, மரகதம் குமரவேல்! இருவரில் ஒருவருக்குதான் வாய்ப்பு! ஆனந்திடம் பொறுப்பை ஒப்படைத்த விஜய்

  • சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் என இரண்டு தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகுதிகளில் ஏற்கெனவே வெற்றி பெற்று அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகிய இருவருக்கும் வாய்ப்பு வழங்காமல், ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்க விஜய் முடிவெடுத்துள்ளார். அந்த ஒருவர் யார் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை அமைச்சர் ஆனந்திடம் ஒப்படைத்திருக்கிறார்.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகம், சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்திருந்தது. இருப்பினும் கூட்டணி ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்கிற நிலை இருந்தது. இதையடுத்து காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, ஐயுஎம்எல், விசிக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதனை தொடர்ந்து விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

    Advertisement

    சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய தருணம் வந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதேபோல சில எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அப்படி இணைந்தவர்கள்தான் மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா. இப்போது இவர்களின் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. திமுக ஏற்கெனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. ஆனால் தவெக இன்னும் வேட்பாளர்களை இறுதி செய்யவில்லை.

    ராஜினாமா செய்த 2 பேரையும் நிற்க வைக்கலாம் என்று பலரும் ஆலோசனை கூறி வரும் நிலையில், விஜய் இதை ஏற்கவில்லை. 2 பேரில் ஒருவருக்கு மட்டும் சீட் கொடுத்துவிட்டு இன்னொரு வேட்பாளரை புதியதாக நிறுத்த வேண்டும் என்று யோசித்திருக்கிறார். நேற்று பனையூர் அலுவலகத்தில் நடந்த வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டத்திலும் இதே முடிவுதான் எடுக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    இருப்பினும், இரண்டு பேருக்கும் சீட் வழங்க வேண்டும் என்று, அவர்களை அதிமுகவிலிருந்து தவெகவுக்கு அழைத்து வந்த அமைச்சர் கூறியதால், இன்னும் வேட்பாளர்களை தவெக தலைமை இறுதி செய்யவில்லை. இன்று மீண்டும் ஆலோசனை நடத்தி வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய தலைமை திட்டமிட்டிருக்கிறது. ஆனால், முதலமைச்சர் விஜய் இன்று லண்டன் செல்கிறார் என்பதால், வேட்பாளர்களை இறுதி செய்யும் பொறுப்பை அமைச்சர் ஆனந்திடம் ஒப்படைத்திருக்கிறார்.

    அவர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இன்று அல்லது செப்.14ம் தேதியன்று வேட்பாளர்களை அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    English Summary

    Sathyabama vs Maragatham Kumaravel: By-elections have currently been announced for the Maduranthakam and Dharapuram constituencies. Vijay has decided to field a candidate in only one of these two constituencies—rather than giving opportunities to both Maragatham Kumaravel and Sathyabama, who had previously won from these seats while with the AIADMK before joining the TVK. He has entrusted the responsibility of deciding which of the two will be fielded to Minister Anand.